கொள்ளையனாக மாறிய மாஜி போலீஸ்காரர்: 101வது முறை கைது
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கத்தில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வரும் முன்னாள் போலீஸ்காரர் 101வது முறையாகக் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 68). இவர் முன்னாள் போலீஸ்காரர். சென்னையில்சிறப்புக் காவல் படையில் பணியாற்றியபோது ஒழுங்கீனம் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் நிரந்தரமாக பணியில்இருந்து நீக்கப்பட்டார்.
போலீஸ்காரராக இருந்தபோதே மக்களிடம் பணம் பறிப்பது போன்ற செயல்களைச் செய்து வந்த இவர், பணி நீக்கம் செய்யப்பட்ட பின்னர்முழு நேர கொள்ளையனாக மாறினார். வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வரும் இவர் இதுவரை 100 முறை கைது செய்யப்பட்டுசிறைக்குச் சென்றுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களிலும் இவர் மீது 40 கொள்ளை, வழிப்பறி, திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இவரைஜாமீனில் எடுப்பதற்காகவே ஒரு வக்கீலையும் நிரந்தரமாக நியமித்துள்ளார் இந்த மாஜி போலீஸ்காரர். அந்த வக்கீலுக்கு பெரிய வீட்டையும்கட்டித் தந்துள்ளார்.
இவர் சிறைக்குச் சென்றவுடன் இந்த வக்கீல் இவரை ஜாமீனில் எடுப்பார். வெளியில் வந்தவுடன் மீண்டும் கொள்ளை அடிப்பார். மாட்டிக்கொண்டால் மீண்டும் சிறை, மீண்டும் ஜாமீன் என்று வாழ்க்கையை சிறையிலும் அடுத்தவர் வீடுகளிலும் (கொள்ளையடிக்க செல்லுமவீடுகள்) கழித்து வருகிறார்.
6 ஆண்டுகளுக்கு முன் வேளாங்கண்ணி ஆலயத்திலேயே தனது கை வரிசையைக் காட்டியுள்ளார். அங்கு புகுந்து உண்டியலை உடைத்துபணத்தைத் திருடியுள்ளார்.
இந் நிலையில் சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் நடந்த ஒரு கொள்ளையில் சிதம்பரம் பிடிபட்டார். அவரிடம் விசாரித்த போலீசாரிடம், நான் 100முறை சிறைக்குப் போய் வந்துவிட்டேன். இப்போது என்னை மீண்டும் சிறையில் தள்ளினாலும் சாகும் வரை திருடிக் கொண்டே தான்இருப்பேன் என்று வசனம் பேசினார்.
அப்போது தான் இவர் 100 முறை சிறைக்குப் போய் வந்திருப்பது போலீசாருக்கே தெரியவந்தது.
ஸ்ரீரங்கத்தில் சுப்பிரமணியபுரத்தில் வசிக்கும் வாமாப்பிள்ளை என்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வாட்டை உடைத்துக்கொள்ளையடித்தார் இவர். இதனால் அங்கு இரவு ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
புலிமண்டபம் பகுதியில் கவுரி என்பவரின் வீட்டை இவர் இரவில் உடைத்துக் கொண்டிருந்த போது தான் இவரை ரோந்து சென்ற போலீசார்மடக்கினர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications