ஓட்டு பதிவை பார்க்க நேரில் வந்த கலாம்
டெல்லி:
நாடாளுமன்ற வளாகத்தில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவை டாக்டர் அப்துல் கலாம் நேரில் பார்வையிட்டார்.வாக்களிக்க வந்த பிரதமர் வாஜ்பாய், அமைச்சர்கள், எம்.பிக்கள் அகியோருடன் அவர் கை குலுக்கினார்.
தனது டிரேட் மார்க் சிரிப்புடன் திடீரென நாடாளுமன்றத்துக்கு காலையில் கலாம் வந்தார். அங்கு நடக்கும் வாக்குப் பதிவை நேரில்பார்வையிட அவர் விரும்புவதாகக் கூறினார். இதையடுத்து அவரை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன்வரவேற்று அழைத்துச் சென்றார்.
வாக்குப் பதிவு நடக்கும் அறைக்குச் சென்ற அவர் தேர்தல் அதிகாரியும் ராஜ்யசபா செயலாளருமான திரிபாதியிடம் ஜனாதிபதி தேர்தல்வாக்குப் பதிவு குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
கலாம் அங்கு வந்ததைக் கண்ட அமைச்சர்களும் எம்.பிக்களும் அவருடன் கை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந் நிலையில் பிரதமர் வாஜ்பாய் வாக்களிக்க வந்தார். கலாமைக் கண்டதும் நேராக அவரிடம் சென்று கை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்தார்.பின்னர் வாஜ்பாய் வாக்களித்தபோது அவருக்கு உதவி செய்ய பிரமோத் மகாஜன் உடன் சென்றார். ஆனால், ஒருவர் வாக்குப் பதிவுசெய்யும்போது உடன் யாரும் இருக்கக் கூடாது என்று கூறி மகாஜனிடம் அதிகாரி சுட்டிக் காட்ட அவர் சிரித்துக் கொண்டே உடனேஅங்கிருந்து விலகினார்.
கலாம் பேட்டி:
சுமார் அரை மணி வாக்குப் பதிவை பார்வையிட்ட கலாம் பின்னர் நிருபர்களிடம் பேசினார். நான் தேர்தலை சந்திக்கிறேன். நான்போட்டியில் இருக்கிறேன் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
நீங்கள் ஜெயித்துவிடுவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, இதை என்னிடம் கேட்டால் எப்படி?, அவர்களிடம் தான் கேட்க வேண்டும்என்று ஓட்டு போட நின்றிருந்த எம்.பிக்களை நோக்கி கை காட்டினார்.
ஹேர் ஸ்டைல் குறித்து கேட்டபோது, நானும் 4 மாதத்துக்கு ஒருமுறை இதை சரி செய்கிறேன். சில நேரம் நீளமாக முடிவை வைத்துக்கொள்கின்ே. சில நேரம் ஒட்ட வெட்டிக் கொள்கிறேன் என்றார்.
சுமார் அரை மணி நாடாளுமன்றத்தில் இருந்தார் கலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications