வாக்குப் பதிவு முடிந்தது: கலாம் 85 சதவீத வாக்குகள் பெறுவார்
டெல்லி:
இந்தியாவின் 12வது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடந்து முடிந்தது. காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவுமாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் முதல் ஆளாக நின்று வாக்களித்தார். இதையடுத்து பல கட்சி எம்.பிக்களும்வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
தமிழக சட்டசபையில் சட்டமன்றக் குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டியில் முதல்வர் ஜெயலலிதா மற்றும்அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்தபின் இருமுறை மட்டுமே சட்டமன்றத்துக்கு வந்துள்ள திமுக தலைவர் கருணாநிதி இன்று மூன்றாவது முறையாககோட்டைக்கு வந்தார். புதிய பென்ஸ் காரில் வந்திறங்கிய கருணாநிதியுடன் முன்னாள் அமைச்சர்களான ஆற்காடு வீராசாமி, துரைமுருகன்ஆகியோரும் உடன் வந்து வாக்களித்தனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 85சதவீத வாக்குகளைப் பெறுவார் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் கேப்டன் லட்சுமி செகல் 10 முதல் 15 சதவீத வாக்குகளைப் பெறுவார்.
தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்படும். லோக்சபா, ராஜ்யசபாவைச் சேர்ந்த 776 எம்.பிக்களும், அனைத்து மாநிலங்களையும்சேர்ந்த 4,120 எம்.எல்.ஏக்களும் இத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
இந்தத் தேர்தலில் ஒரு எம்.பியின் வாக்கின் மதிப்பு 708 ஆகும். எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகையைப்பொறுத்து மாறுபடும்.
ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்கவுள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களின் மொத்த ஓட்டு மதிப்பு 10,98,919. இதில் எம்.பிக்களின் மொத்த ஓட்டுமதிப்பு 5,49,408. எம்.எல்.ஏக்களின் ஓட்டு மதிப்பு 5,49,511.
தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏவின் ஓட்டு மதிப்பு 176. இங்குள்ள 234 எம்.எல்.ஏக்களின் மொத்த ஓட்டு மதிப்பு 41,184.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications