துணை ஜனாதிபதி பதவி: பா.ஜ.கவுக்கு ஜெயலலிதா ஆதரவு
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிடும் பா.ஜ.க. தலைவர் பைரோன் சிங்செகாவத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
அதிமுகவின் ஆதரவு கோரி துணைப் பிரதமர் அத்வானி நேற்றும் இன்றும் இரண்டு முறை முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசினார்.
முன்னாள் ராஜஸ்தான் முதல்வரான பைரோன்சிங் செகாவத் இன்று முறைப்படி துணை ஜனாதிபதி வேட்பாளராக தேசிய ஜனநாயக்கூட்டணியால் அறிவிக்கப்படுகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன் இவரை துணை ஜனாதிபதியாக்குவது குறித்து கூட்டணிக்கட்சிகளுடன் பிரதமர் வாஜ்பாய் ஆலோசனை நடத்தினார்.
இன்று செகாவத்தின் பெயரை தே.ஜ. கூட்டணி முறைப்படி அறிவிக்கிறது.
இவருக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துவிட்டது. அதே போல சமாஜ்வாடிக் கட்சியும் செகாவத்தை ஆதரிக்க மறுத்துவிட்டதாகத்தெரிகிறது. இதனால் போட்டியைச் சமாளிக்க பல கட்சிகளிடமும் பா.ஜ.க. ஆதரவு திரட்டி வருகிறது.
நேற்று இரவும் இன்று காலையும் துணைப் பிரதமர் அத்வானி தொலைபேசி மூலம் முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டுபேசினார்.
அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுத்தும் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அத்வானியிடம்ஜெயலலிதா உறுதியளித்தார்.
அடுத்த மாதம் 12ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. செகாவத்தை எதிர்த்து காங்கிரஸ்- இடதுசாரிக் கட்சிகள் போட்டிவேட்பாளரை நிறுத்த உள்ளன.
ஆர்.எஸ்.எஸ். பின்னணி:
ஆனால், பைரோன் சிங் செகாவதுக்கு ஆர்.எஸ்.எஸ். பின்னணி இருப்பதால் அவரை ஆதரிக்க மாட்டோம் என சரத் பவாரின்தேசிய வாத காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேராத நடுநிலையான ஒருவரை பிரதமர் வாஜ்பாய் துணை பதவி பதவிக்கு நிறுத்தினால், அவரை காங்கிரஸ்ஆதரிப்பது குறித்து யோசிக்கும் என தேசியவாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இந் நிலையில் செகாவத் நாளை துணை ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
நாளை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை:
இந் நிலையில் ஜனாதிபதி பதவிக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. மாலை 3 மணிக்கு முடிவுஅறிவிக்கப்பட்டுவிடும். இதில், அப்துல் கலாம் வெல்லப் போவது உறுதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications