ஜனாதிபதி தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
டெல்லி:
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" டாக்டர் அப்துல் கலாம் தான் என்று ஏறக்குறையமுடிவாகிவிட்ட நிலையில் இப்பதவிக்கான தேர்தலின் முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்குள் தெரிந்து விடும்.
டாக்டர் அப்துல் கலாம் தவிர இடது சாரிக் கட்சிகள் நிறுத்திய சுதந்தரப் போராட்ட வீராங்கனையான கேப்டன்லட்சுமி சேகலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.கடந்த திங்கள்கிழமை (ஜூலை 15) ஜனாதிபதி தேர்தல் நடந்தது.லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவின் 735 எம்.பிக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். மற்றும் அனைத்து மாநிலஎம்.எல்.ஏக்களும் தங்களுடைய வாக்குப்பதிவைச் செலுத்தினர்.அனைத்து மாநிலங்களிலிருந்தும் வாக்குப் பெட்டிகள் ஏற்கனவே டெல்லி வந்து சேர்ந்து விட்டன.நாடாளுமன்றத்தில் ஒரு அறையில் இந்த வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறை சீலிடப்பட்டு,அறைக்கு வெளியே ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. பிற்பகல் 3 மணிக்குள்முடிவு வெளியாகி விடும் என்று தெரிகிறது."துணை ஜனாதிபதி"க்கு போட்டியிடும் ஷெகாவத்:
இதற்கிடையே துணை ஜனாதிபதி தேர்தலுக்கு தன்னுடைய அதிகாரப்பூர்வமான வேட்பாளராக ராஜஸ்தான்முன்னாள் முதல்வரான பைரோன் சிங் ஷெகாவத்தை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிநிறுத்தியுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கு காங்கிரஸ் தன்னுடைய வேட்பாளரை அறிவித்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி.ஷெகாவத் தான் தங்கள் கூட்டணியின் வேட்பாளர் என்று பா.ஜ.க. இன்று மாலை அதிகாரப்பூர்வமாகவேஅறிவித்து விட்டது.
மூத்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான ஷெகாவத், ஒரு சாதாரண கிராம பஞ்சாயத்துத் தலைவராகக் கூட தன்னால்வர முடியுமா என்று அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் யோசித்துள்ளார்.
ஆனால் அரசியலில் தான் உழைத்த உழைப்பும் அதிர்ஷ்டமும் தான் தன்னை இந்த அளவுக்கு உயர்த்திக் கொண்டுவந்துள்ளது என்றும் நெகிழ்ந்து போய் சொல்கிறார் 79 வயது நிரம்பிய ஷெகாவத்.
பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத நிலையிலும் படிப்படியாக உயர்ந்து மூன்று முறை ராஜஸ்தான் முதல்வராகவும்பதவி வகித்துள்ளார். தற்போது துணை ஜனாதிபதி தேர்தலிலும் நிற்கிறார்.
நன்கு படித்த அணு விஞ்ஞானியான டாக்டர் அப்துல் கலாமும் பள்ளிப் படிப்பையே தாண்டாத ஷெகாவத்தும்நாட்டின் உயரிய பதவிகளை வகிக்கப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications