மசூதிக்குள் ஒழிந்திருக்கும் தீவிரவாதிகள்- ராணுவம் கடும் சண்டை

Subscribe to Oneindia Tamil

ஜம்மூ:

ஜம்மூவில் மசூதிக்குள் ஒளிந்துள்ள தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று நள்ளிரவு முதல் நடந்தகடும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. 4 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.இந்தச் சணடை தொடர்ந்து நடந்து வருகிறது.

நாளை அமர்நாத் புனித யாத்திரை தொடங்க உள்ள நிலையில் அதன் வழியில் உள்ள தோடா மாவட்டம் பனிஹால் நகரில் இந்தச்சம்பவம் நடந்துள்ளது.

இந்தப் பகுதி முழுக்க முழுக்க காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் பல தீவிரவாதிகள் மசூதிக்குள்ளும் அருகாமைக்காட்டுப் பகுதிக்குள்ளும் மறைந்திருப்பதாகத் தெரிகிறது. அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் மீது தாக்குதல்நடத்துவதற்காக 21 தீவிரவாதிகள் அருகாமை கிராமப் பகுதிகளுக்குள் நேற்று நள்ளிரவு நுழைந்ததாகக் தெரிகிறது. இவர்கள் பலகுழுக்களாக பிரிந்து பல வீடுகளில் மறைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

4 வீரர்கள் பலி?:

இந்தத் தகவல் அறிந்து அந்தப் பகுதிக்கு ராணுவத்தினர் விரைந்தபோது 7 தீவிரவாதிகள் மசூதிக்குள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து மசூதியை ராணுவம் சுற்றி வளைத்தது. இதையடுத்து தீவிரவாதிகள் மசூதிக்குள் இருந்து ராணுவத்தினர் மீதுதுப்பாக்கியால் சுட்டனர். இதில் 7 ராணுவத்தினர் பலத்த காயமடைந்தனர். இதில் 4 பேர் இறந்துவிட்டதாகத் தெரிதிறது. ஆனால்,இதை அரசும் ராணுவமும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மசூதிக்கு சேதம் ஏற்பட்டுவிடாத வகையில் ராணுவம் தாக்கிவருவதால் தீவிரவாதிகளின் கை ஓங்கியுள்ளது.

இருப்பினும் 3 தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தப் பகுதி ஜம்மூ- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில்அமைந்துள்லது. இச் சம்பவத்தையடுத்து இந்த நெடுஞ்சாலையை ராணுவம் மூடியது. காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன்இணைப்பது இந்த நெடுஞ்சாலை தான்.

97,800 யாத்ரீகர்கள்:

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் திட்டத்துடன் தான் இந்தத் தீவிரவாதிகள் இங்கு வந்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.இந்த யாத்திரையையொட்டி அதன் பாதை முழுவதும் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 97.853 பேர்இந்த யாத்திரையில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.

மசூதிக்குள் இருந்து தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகளை செலுத்தினர். இந்தக் குண்டுகள் அருகாமையில் உள்ள இரு வீடுகளைதரைமட்டமாக்கின.

பொய் சொல்லும் பாக்: பெர்னாண்டஸ்

இந் நிலையில் கடந்த மாதத்தில் மட்டும் 97 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் நுழைந்திருப்பதாக மத்திய அரசுஇன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. தீவிரவாதிகள் நுழைவதைத் தடுத்துவிட்டதாக பாகிஸ்தான் உலக நாடுகளிடம் பொய்சொல்லி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்ப ஐ.எஸ்.ஐ. தொடர்ந்து முயன்று வருவதாகவும் அவர் கூறினார். இந்த ஆண்டு மட்டும்,கடந்த 6 மாதத்தில், 762 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

இந்தியாவை விரும்பும் காஷ்மீரிகள்:

அதே போல காஷ்மீரில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் 61 சதவீத மக்கள் இந்தியாவுடன் தொடர்ந்து இருப்பதையே விரும்புவதாகத்தெரிவித்துள்ளனர். 6 பேர் பாகிஸ்தானியர்களாக வாழ விரும்புவதாகக் கூறியுள்ளனர். 33 சதவீதத்தினர் எந்த பதிலும் சொல்லவிரும்பவில்லை என்று கூறியுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் திக்விஜய் சிங் இன்றுகூறினார்.

ஐ.எஸ்.ஐ. நச்சுக் கரம்:

இந்தியா முழுவதும் 63 இடங்களில் ஐ.எஸ்.ஐ. தனது பிரிவுகளை அமைத்துள்ளதாகவும் ஒவ்வொரு பிரிவுக்கும் மாதம் ரூ. 75லட்சம் வரை பாகிஸ்தான் செலவிடுவதாகவும். ஐ.எஸ்.ஐ. கூலிகள் 4 அல்லது 5 பேராக பிரிந்து பல மாநிலங்களில் வாழ்ந்துவருவதாகவும் உத்தரப் பிரதேசத்தில் தான் அதிக அளவில் இவர்கள் இருப்பதாகவும் மத்திய உளவுப் பிரிவு கூறியுள்ளது.இவர்களுடைய முக்கிய வேலை இந்திய ராணுவ ரகசியங்களை சேகரித்து பாகிஸ்தானுக்கு அனுப்புவது தான் எனவும் உளவுப்பிரிவுகள் தெரிவித்துளளன.

காணாமல் போய் தீவிரவாதிகளானவர்கள்:

இதற்கிடையே காஷ்மீரில் கடந்த 12 ஆண்டுகளில் காணாமல் போன 3,184 பேரில் பெரும்பாலானவர்கள் தீவிரவாதஇயக்கங்களில் சேர்ந்துள்ளதாகவும் அவர்கள் தாங்களாகவே தலைமறைவாகிவிட்டதாகவும் கர்ஷ்மீர் அரசு சட்டசபையில் இன்றுதெரிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+