பலத்த பாதுகாப்புடன் துவங்கியது அமர்நாத் யாத்திரை
ஜம்மு:
ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை இன்று காலை ஜம்முவிலிருந்து பலத்த பாதுகாப்புடன்தொடங்கியது.
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரமான தாக்குதல் நடத்தபாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதன் எதிரொலியாக நேற்று கூட சில தீவிரவாதிகள் ஜம்முவுக்குள் வர முயற்சித்த போது ராணுவத்தினர் அவர்கள்மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அந்தத் தீவிரவாதிகள் ஒரு மசூதிக்குள் சென்று ஒளிந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
முன்னதாக கடந்த 13ம் தேதி குவாசிம் நகரில் 28 அப்பாவிப் பொது மக்களையும் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
இந்தச் சம்பவங்களையும் உளவுத்துறை எச்சரிக்கையையும் தொடர்ந்து அமர்நாத் யாத்திரை நடக்கும் வழிநெடுகிலும் துப்பாக்கி ஏந்திய நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சுமார் 98,000 பேர் இந்த அமர்நாத் யாத்திரையில் பங்கு கொள்கின்றனர். அதன் முதற்கட்டமாகத் தான் இன்றுகாலை 2,651 பேர் தங்களுடைய யாத்திரையைத் தொடங்கினர்.
பல்வேறு வாகனங்கள் மற்றும் குதிரைகள் மூலம் அவர்கள் இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.
எங்களுடன் ராணுவத்தினர் இருப்பதால் நாங்கள் எந்தவிதமான பயமும் இல்லாமல் இந்த யாத்திரையைமேற்கொண்டுள்ளோம். கடந்த ஆண்டு கூட எங்கள் கண் முன்னாலேயே இரு தீவிரவாதிகளை ராணுவத்தினர்சுட்டுக் கொன்றனர் என்று சில பக்தர்கள் கூறினர்.
மூன்று நாட்கள் வரை பயணம் செய்யும் இந்த யாத்திரீகர்கள் பின்னர் புகழ் பெற்ற அமர்நாத் குகையை அடைந்துவழிபாடு செய்வார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications