சென்னையில் ஏமாற்றிக் கொள்ளையடித்த 7 போலீசார் கைது
சென்னை:
சென்னை எழும்பூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் போல நடித்து ரூ.40.5 லட்சத்தை மோசடி செய்து கொள்ளையடித்துச்சென்ற 5 போலீசார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.4 லட்சம் கொள்ளை வழக்கில் வேறு 2போலீசார் உள்பட 2 பேர் கைதாகியுள்ளனர்.
எழும்பூர் பகுதியில் தங்க பிஸ்கெட்டுகளை வாங்கி விற்பனை செய்து வரும் சீனிவாசன் என்பவரிடம் சி.பி.ஐ.அதிகாரிகள் போல் நடித்த சிலர் ரூ.40.5 லட்சத்தை மோசடி செய்து எடுத்துச் சென்று விட்டனர்.
அதன் பிறகே பணத்தை "அடித்துச்" சென்றவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் இல்லை என்ற விவரம் தெரிய வந்தது.இதையடுத்து போலீசாரிடம் சீனிவாசன் புகார் கொடுத்தார்.
இந்தக் கும்பலைப் பிடிப்பதற்காகத் தனிப் படை அமைத்து அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.அப்போது தான் இந்தச் சம்பவத்திற்கும் ஆவடியில் உள்ள தமிழக சிறப்புக் காவல் படையில் பணிபுரியும்சப்-இன்ஸ்பெக்டர் குழந்தைசாமிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து குழந்தைசாமியிடம் தனிப் படைப் போலீசார் விசாரித்த போது, அவர் தலைமையிலான சில போலீசார்தான் சி.பி.ஐ. அதிகாரிகள் போல "சபாரி" ஆடையெல்லாம் போட்டுக் கொண்டு சீனிவாசனிடம் ரூ.40.5 லட்சத்தைக்கொள்ளையடித்தது தெரிய வந்தது.
குழந்தைசாமியை உடனடியாகக் கைது செய்த போலீசார் மற்ற போலீசாரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 போலீசார் உள்பட 8 பேரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தமிழக விசேஷ போலீஸ் படையின் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், பழனியப்பன், அப்பாசாமி, தியாகு,பரமசிவம் ஆகிய போலீசாரும் கொள்ளைத் திட்டத்தை வகுத்துக் கொடுத்த திருமங்கையாழ்வார், புண்ணியமூர்த்திமற்றும் கருணாகரன் ஆகியோரும் தான் கைது செய்யப்பட்டவர்கள்.
கொள்ளையடிக்கப்பட்ட ரூ.40.5 லட்சத்தில் ரூ.20.4 லட்சம் வரை பணத்தை போலீசார் அவர்களிடமிருந்து மீட்டனர்.
மற்றொரு கொள்ளையில் 2 போலீசார் கைது:
இதற்கிடையே சென்னை பெரியமேட்டில் ரூ.4 லட்சம் ஏமாற்றிக் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கிலும் 2 போலீசார்உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்டீபன் மற்றும் அண்ணாமலை ஆகிய போலீசாரும் விமல் என்ற புரோக்கரும் மற்றும் ஜீனத் என்ற விபச்சாரியும்கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ரூ.1.5 லட்சத்தை போலீசார் மீட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications