அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடர்ந்தது
ஜம்மூ:
பலத்த மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று காலை மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது.
புகழ் பெற்ற அமர்நாத் யாத்திரை கடந்த 19ம் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் மிரட்டல்காரணமாக அமர்நாத் யாத்திரை நெடுகிலும் ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பகல்காம் பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் கடும் குளிர் காரணமாக அமர்நாத் யாத்திரை நேற்றுதற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 6,200 பக்தர்கள் ஜம்மூவில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். காலநிலை சரியான பிறகு ஓரிரு நாட்களில் அவர்கள் மீண்டும் யாத்திரையைத் தொடங்குவார்கள்என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் மழை நின்று விட்டதைத் தொடர்ந்து அமர்நாத் யாத்திரையின் நான்காவது குழுவினர்இன்று காலை தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
யாத்திரைக்கான சாலைகளெல்லாம் சரியாகி விட்டதை உறுதி செய்து கொண்ட பிறகு, 454 வாகனங்களில் அவர்கள்கிளம்பிச் சென்றனர்.
சிவலிங்கத்தை தரிசித்த ராணுவத்தினர்:
இதற்கிடையே இதுவரை அமர்நாத் குகைக்கு யாத்திரையாகச் சென்று சேர்ந்த 13,666 பக்தர்கள் அங்குள்ளசிவலிங்கத்தைத் தரிசனம் செய்தனர்.
அங்கு சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.
மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக அமர்நாத் குகைக்குச் சென்றிருந்த 6,288 ராணுவத்தினரும் அங்குள்ளசிவலிங்கத்தைத் தரிசித்து வழிபட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications