காவிரி வழக்கிலிருந்து விலக கர்நாடக நீதிபதி விருப்பம்: விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி:
காவிரி பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தொடர்பாக வாதாடி வந்தகர்நாடகத்தைச் சேர்ந்த நீதிபதி சிவராஜ் பாட்டீல் இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்ள விருப்பம்தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நீரை காவிரியில் கர்நாடகஅரசு திறந்து விட வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுவழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே தமிழக விவசாயிகள் நல அமைப்பினரும் கடந்த வாரம் மற்றொரு மனுவை உச்ச நீதிமன்றத்தில்தாக்கல் செய்தனர்.
இந்த இரண்டு மனுக்களும் நேற்று உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு வந்தன. நீதிபதி ஒய்.கே. சபர்வால் மற்றும்நீதிபதி சிவராஜ் பாட்டீல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதை விசாரித்தது.
தான் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்ள விரும்புவதாக நீதிபதி சிவராஜ்பாட்டீல் அப்போது கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப்பரிந்துரைக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே இனிமேல் காவிரி ஆணையக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சமீபத்தில்கூறிய தமிழக அரசு, காவிரி பிரச்சனை தொடர்பாக கடந்த 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்குதொடர்ந்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications