சென்னை மருத்துவமனையில் குழந்தை கடத்தல்
சென்னை:
சென்னையில் மாநகராட்சி மகப்பேறு மருத்தவமனையில் நேற்று ஒரு ஆண் குழந்தை கடத்தப்பட்டது.
சென்னை-செனாய் நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு மருத்துவமனை உள்ளது.
இங்கு கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சித்ரா என்ற பெண் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்கு இருதினங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று அந்தக் குழந்தை நேற்று திடீரென்று காணாமல் போய்விட்டது. இதனால் அதிர்ந்து போனஅதன் பெற்றோர் மருத்துவமனை முழுவதும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர்கள் தான் தன் குழந்தையைக் கடத்திச் சென்றிருப்பார்கள் அல்லது கடத்தலுக்குஉதவியிருப்பார்கள் என்று குழந்தையின் தந்தை புகார் கூறினார்.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு அந்தக் குழந்தையின் பெற்றோரும் உறவினர்களும் சக நோயாளிகளும்குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கோரி மருத்துவமனையின் முன் திடீர் சாலை மறியலில்ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு விரைந்து மறியல் செய்தவர்களைச் சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையே சைதாப்பேட்டையில் சாலையோரம் ஒரு குழந்தை அனாதையாகக் கிடப்பதாகப் போலீசாருக்குத்தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் அந்தக் குழந்தையை மீட்டனர்.
விசாரணையில் அந்தக் குழந்தை செனாய் நகர் மாநகராட்சி மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட குழந்தை தான்அது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்தக் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே அந்த ஆண் குழந்தையைக் கடத்திச் சென்று சைதாப்பேட்டையில் கொண்டு போய் போட்டவர்கள்யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications