சேலம் மக்களுக்கு ஜெயலலிதா "ஐஸ்"
சேலம்:
சேலத்தில் நேற்று ரூ.232 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாஅந்நகர மக்களின் மனம் குளிரும் வகையில் பேசி உற்சாகமூட்டினார்.
தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நேற்று சேலத்திற்கு வந்தார் ஜெயலலிதா.
சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் ஜெயலலிதா கூறியதாவது:
சேலத்து மக்களாகிய உங்களுடைய அன்பான முகங்களைப் பார்ப்பதற்காக வந்துள்ளேன்.
சேலம் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய அகராதியில்சேலம் என்றால் நம்பிக்கை என்று தான் பொருள்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளையும் அதிமுக கூட்டணிக்கே வாரி வழங்கியுள்ளவள்ளல்கள் நீங்கள். இந்தத் தொகுதிகள் எல்லாம் எனக்கே என்று அள்ளிக் கொடுத்துள்ளீர்கள்.
என் மீது நீங்கள் வைத்துள்ள இந்த நம்பிக்கையும் நான் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும் முழுமையானது.நூறு சதவீதம் கூட. அதனால் தான் நான் உங்களுக்குத் தெரிவிக்க வந்த நன்றியும் நூறு சதவீதம்.
தேர்தல் என்ற ஜனநாயகத் தேர்வில் எனக்கு நீங்கள் 100க்கு 100 மதிப்பெண் வழங்கினீர்கள். அதனால் தான் நானும்உங்களுக்கு 100க்கு 100 நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய நன்றிகளை வார்த்தைகளால் தெரிவிக்காமல் பல்வேறு நலத்திட்டங்களின் வடிவில் கொண்டுவந்துள்ளேன். என்னை நம்பியவர்களை நான் ஒரு போதும் கைவிட்டதில்லை என்று சேலம் மக்களைக்குளிர்வித்தார் ஜெயலலிதா.
விழாவில் அவர் மேலும் கூறியதாவது:
என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில்? இந்தியாவில் இயற்கை வளங்கள் உள்ளன. ஆற்றல் மிக்க தலைவர்கள்உள்ளனர். அறிவு மிக்க விஞ்ஞானிகள் இருக்கின்றனர். நல்ல மனித வளமும் உள்ளது.
ஆனால் நம்மிடம் இல்லாதது ஒன்றே ஒன்று தான். அது ஒற்றுமை. அந்த ஒற்றுமை மட்டும் நம்மிடம் இருந்தால்,அதைப் போற்றிப் பாதுகாத்தால் இந்தியா உலகிலேயே பெரும் வல்லரசாக விளங்கும் காலம் வெகு தூரத்தில்இல்லை.
நம்மிடையே உள்ள மற்றொரு பலவீனம், மொழியால் வேற்றுமை பாராட்டுவது. அது மட்டுமல்ல. ஜாதி மற்றும்மதத்தின் பெயரைச் சொல்லியும் கூட வேற்றுமை பாராட்டுகிறோம்.
இப்படி நம்மிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் தான் மொகலாயர்களிலிருந்து வெள்ளையர்கள் வரை நம்மைஅடிமைப்படுத்தினர். வெள்ளையர்களிடமிருந்து நாம் விடுதலை பெற சுமார் 300 ஆண்டுகள் ஆயிற்று.
அந்த விடுதலையைப் போற்றிப் பாதுகாக்காமல் நாம் மாவட்டத்துக்கு மாவட்டம், மாநிலத்துக்கு மாநிலம்வேற்றுமை பாராட்டிக் கொண்டிருக்கிறோம்.
அதனால் தான் பிரிவினை பேசும் எவரையும் இரும்புக் கரம் கொண்டு அதிமுக அரசு ஒடுக்கும் என்பதை மீண்டும்நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தைக் கூறுபோட நினைக்கும் தலைவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்கள் தலைவர் என்றுஅழைப்பதற்கே தகுதியற்றவர்கள். நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்க நினைப்பவர்களை பொது வாழ்வில்இருந்தே மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
