நா காக்க: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி அறிவுரை
சென்னை:
மாற்றுக் கட்சியினர் குறித்து முதல்வர் ஜெயலலிதா கடும் சொற்களால் அர்ச்சனை செய்வதை நிறுத்த வேண்டும். ஜெயலலிதாவின் பேச்சு நாகாக்க என்ற திருக்குறளுக்கு மாறானது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நேற்று சேலத்தில் பேசிய ஜெயலலிதா தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற ராநதாசின் கோரிக்கை குறித்து மிகக் கடுமையாகவிமர்சித்தார். ராமதாசை கடுமையாக கண்டித்துப் பேசினார்.
இது குறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டாக்டர் ராமதாஸ் தமிழகத்தைப் பிரித்து தனி நாடாக அறிவிக்கக் கோரவில்லை. மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளார்.இந்தக் கோரிக்கை கூட திமுகவுக்கு உடன்பாடானதல்ல.
ஆனால், அதற்காக ராமதாஸைக் கண்டித்துப் பேசவும் ஒரு வரைமுறை உண்டு. ராமதாஸ் போன்றவர்கள் தலைவர்களாக இருக்கவேலாயக்கில்லை. அவர்களை பொது வாழ்வில் இருக்கவே தகுதியில்லை. அவரை மக்கள் ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். ஜாதிரீதியில்கூறுபோடும் அவரை அரசியலில் இருந்த விரட்டி அடிக்க வேண்டும் என இழி சொற்களால் ஜெயலலிதா அர்ச்சனை செய்துள்ளார்.
இது போன்ற பேச்சுக்கள் ஆட்சியில் இருப்பவர்கள் பேசுவது சரியல்ல. ஆட்சியில் வீற்றிருப்போர் எதையும் பேசிவிடலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கருத்து மாறுபாடுகள் இருந்தால் அதை உரிய முறையில் சுட்டிக் காட்டி பேசுவது தான் முறையான செயலாக இருக்கும். காங்கிரஸ்,மார்க்சிஸ்ட், திமுக கூடத் தான் ராமதாஸின் கருத்தை எதிர்த்துப் பேசின. ஆனால், அரசு விழாவை அரசியல் விழாவாக்கி இப்படிஜெயலலிதா போல வசைபாடவில்லை. எதிர்க் கட்சியினரை இழி சொற்களால் வசைபாடுவது நா காக்க என்ற குறளுக்கு முரணானது என்றுகருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருணாநிதி பேட்டி:
இந் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி நிருபர்களையும் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
போலீஸ்காரர்களிடம் மட்டும் குறை கேட்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் மட்டும் கோரிக்கை மனுக்களை வாங்குகிறார்.தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மனம் வெதும்பிப் போய் உள்ளனர். அவர்களின் குறைகளையும் ஜெயலலிதா கேட்க வேண்டும்.
தமிழகத்தில் போலீசார் உள்பட அரசு ஊழியர்கள் அனைவரின் பண்டிகைகால நிதி, போனஸ் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.அதை ஊழியர்களுக்கு அரசு உடனே வழங்க வேண்டும்.
அரசு விழாக்கள் என்ற பெயரில் ஜெயலலிதா பிரம்மாண்டமான பொருட் செலவில் விழாக்கள் நடத்தி மக்கள் பணத்தை வீணடித்துவருகிறார். கடந்த ஆட்சியில் அவர் எதைச் செய்தாரோ அதையே தான் இந்த ஆட்சியிலும் செய்து வருகிறார். ஆனால், இதைபத்திரிக்கைகள் மறைத்து வருகின்றன என்றார் கருணாநிதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications