அமைச்சரின் பேச்சால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி
டெல்லி:
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தீவிரவாதிகள் என்று லோக்சபாவில் அமைச்சர் குறிப்பிட்டுப் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து அவையில் கூச்சல்- குழப்பம் நிலவியது. சபாநாயகர் தலையிட்டு அமைச்சர் பேசியதை நீக்க வேண்டிய நிலை உருவானது.
நேற்று குஜராத் விவகாரத்தால் முழு நாளும் ஒத்தி வைக்கப்பட்ட லோக்சபா இன்று கூடியது. கேள்வி நேரத்தின்போது எல்லை தாண்டியபயங்கரவாதம் குறித்த ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் வித்யாசாகர் ராவ் பதிலளித்தார்.
அப்போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தீவிரவாதிகள் என்று அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து அமைச்சருக்கு எதிராக குரல்எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
இதையடுத்து சபாநாயகர் மனோகர் ஜோஷி தலையிட்டார். அவர் பேசுகையில், அமைச்சரின் பேச்சை உடனே அவைக் குறிப்பில் இருந்துநீக்க உத்தரவிடுகிறேன். தீவிரவாதிகள் என்பவர்கள் தீவிரவாதிகள தான். அவர்களுக்கு மதமோ, இனமோ கிடையாது. ஒரு சமூகத்தையேதீவிரவாதிகளாக சித்தரிப்பை ஏற்க முடியாது என்றார்.
பின்னர் அமைச்சர் வித்யாசாகர் பேசுகையில், நான் தீவிரவாதிகளை ஒரு இனத்துடன் ஒப்பிடவில்லை. தீவிரவாதத்தை பாகிஸ்தான்தூண்டுவிட்டு வருவதைத் தான் குறிப்பிட்டேன் என்றார். இதையடுத்து தான் அவையில் அமைதி திரும்பியது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications