வீரப்பன் - வாஸ்து: வீட்டை இடித்தார் ராஜ்குமார்
தாளவாடி:
வீரப்பன் நடமாட்டம் நிறைந்த காட்டுப் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டை கன்னட நடிகர் ராஜ்குமார் இடித்துத் தள்ளிவிட்டார். இந்தவீட்டில் இருந்து தான் ராஜ்குமார் கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர். அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு அருகே ஏக்கர்கணக்கில் நிலம் வாங்கி பண்ணையை அமைத்தார் ராஜ்குமார். பின்னர் இந்தப் பண்ணையின் நடுவே மிகப் பெரிய வீட்டைக் கட்டினார்.
ஓய்வு கிடைக்கும் நேரத்தில் தனது குடும்பத்துடன் அவர் இங்கு வந்து தங்குவது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவ்வாறு தனதுகுடும்பத்தினருடன் இங்கு அவர் தங்கியிருந்தபோது தான் வீரப்பனிடம் சிக்கினார்.
இரவு நேரத்தில் இந்த வீட்டுக்குள் புகுந்த வீரப்பன் அவரைக் கடத்திச் சென்றான்.
அவனிடம் இருந்து விடுதலையான பின்னர் இந்தப் பகுதிக்கே ராஜ்குமார் வரவில்லை. இந் நிலையில் இந்த பண்ணை வீடு வாஸ்துசாஸ்திரப்படி கட்டப்படாததால் தான் கடத்தல் சம்பவமே நடந்ததாக ராஜ்குமாரின் ஜோதிடர் கூறியுள்ளார். அந்த வீட்டை உடைத்துத்தள்ளவும் ஜோதிடர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து அந்த மிகப் பெரிய வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிரே வாஸ்து சாஸ்திரப்படி ஒரு வீடுகட்டப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications