ஸ்டாலினுக்காக வக்காலத்து வாங்கியது ஏன்?: நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் சூடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக சென்னை மாநகர முன்னாள் மேயர் ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்டவழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் அவர் மீது அதிக அக்கறை காட்டிய சென்னை முதன்மைசெசன்ஸ் நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி அசோக்குமாரைக் கண்டித்துள்ளது.

சிவகாசி அதிமுக பிரமுகரான செண்பகமூர்த்தி என்பவர் இது தொடர்பாகத் தாக்கல் செய்த வழக்கை விசாரித்தசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கற்பக விநாயகம், ஸ்டாலின் சொத்து சேர்த்தது தொடர்பாக எந்தவிதமானஆதாரமும் இல்லாததால் அதைத் தள்ளுபடி செய்தார்.

மேலும் முதலில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அசோக்குமாரையும் நீதிபதி கற்பக விநாயகம் கண்டித்தார்.இது தொடர்பாக அவர் தன் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

மனுதாரர் வழக்கு தொடர்ந்த நேரத்தில் (உள்ளாட்சி) தேர்தல் நடக்க இருந்தது. தேர்தலை மனத்தில் வைத்துக்கொண்டே அவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

ஆனால் ஸ்டாலினும் இந்தத் தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு தன்னை சுத்தமானவர் என்று நிரூபிப்பதற்காகஇந்த வழக்கை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

இதற்கெல்லாம் செசன்ஸ் நீதிமன்றம் எப்படி அனுமதித்தது என்று தெரியவில்லை.

ஸ்டாலின் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் எந்த விதமான ஆதாரமும் இல்லை என்பதால் வழக்கு பதிவுசெய்யப்பட்ட அன்றே இதை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதைச்செய்யவில்லை.

மேலும் நீதிமன்றத்துக்கு வரச் சொல்லி சம்மனே அனுப்பப்படாத நிலையில் ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜரானார்.விசாரணை நடத்தவும் ஸ்டாலின் கோரினார். அதை எப்படி நீதிபதி அனுமதித்தார் என்பதும் விளங்கவில்லை.

வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதே போலீசார் விசாரணைக்கு உத்தரவிடாமல் ஸ்டாலின் கேட்டுக் கொண்டபிறகே உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. ஸ்டாலின் கறைபடாதவர் என்பதை விளம்பரப்படுத்த வேண்டும் என்றநோக்கத்திற்காகத் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இவை தவிர, இந்த வழக்குக்குச் சற்றும் தொடர்பில்லாத பல ஆவணங்களையும் நீதிபதி தேவையில்லாமல்விரிவாகப்படித்து விட்டு, அதிலும் ஸ்டாலினுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.

ஸ்டாலின் மீது நீதிபதி இவ்வளவு அக்கறை காட்ட வேண்டிய காரணம் என்ன?

இரண்டு கட்சிக் காரர்களும் தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு நீதிமன்றத்தை ஒரு கால்பந்து மைதானம்போலப் பயன்படுத்திக் கொண்டு விளையாடியுள்ளனர். நடுவராக இருக்க வேண்டிய நீதிபதியோ கால்பந்தாகவேமாறியுள்ளார்.

உண்மையில் இந்த வழக்கினால் இரு கட்சியினரும் பாதிக்கப்படவில்லை. மாறாக நீதிமன்றமும் நீதித்துறையும் தான்பாதிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் மொத்த நேரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

""ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வதே முறை"" என்ற குறளுக்கு விரோதமாகவிசாரணைக்கு வந்த ஒருவருக்கு செசன்ஸ் நீதிமன்றம் நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஆனால் பொதுமக்களும் மற்ற நீதிமன்றங்களும் அந்த நீதிபதிக்கு நற்சான்றிதழ் வழங்க மாட்டார்கள். நற்சான்றிதழ்பெறத் தகுதியில்லாதவர் என்று தான் கருதுவார்கள் என்று நீதிபதி கற்பக விநாயகம் தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+