கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஸ்டிரைக்: ஒளிபரப்புகள் நிறுத்தம்
சென்னை:
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடுமுழுவதும் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கேபிள் டிவி சீரமைப்புச் சட்டத்தை ராஜ்யசபாவில் நிறைவேற்றாமல் இருப்பதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. பே சேனல்கள் எனப்படும் கட்டண சேனல்களின் விலையை நிர்ணயிக்க இந்தச் சட்டத்தில் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தச் சட்டம் லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால், ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட எதிர்க்கட்சிகளிடம் தான் அதிக எம்.பிக்கள் உள்ளனர்.
இந்தச் சட்டத்தால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மட்டும் தான் லாபம் பெறுவார்கள், மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிவரும் என்று கூறி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இவர்கள் ஆதரவு இல்லாமல் இந்தச் சட்டத்தைநிறைவேற்றவும் முடியாது. இதனால் மத்திய அரசு கையைப் பிசைந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் இச் சட்டத்தை ராஜ்யசபாவில் நிறைவேற்றாமல் இருப்பதைக் கண்டித்து நாடு முழுவதும் கேபிள் டிவிஆபரேட்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கட்டண சேனல்களை இன்று காலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணிவரை ஒளிபரப்ப மாட்டோம் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால், நாட்டின் பல பகுதிகளிலும் கட்டண சேனல்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக எல்லா சேனல்களின் ஒளிபரப்பையும்கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நிறுத்திவிட்டனர்.
இதனால் கட்டண சேனல்கள் அல்லாத இலவச சானல்களான சன் டிவி, ராஜ் டிவியையும் கூட பார்க்க முடியாத நிலைக்கு மக்கள்தள்ளப்பட்டுள்ளன.
கேபிள் டிவி வந்ததில் இருந்து ஆண்டெனாக்களை எல்லாம் கழற்றிவிட்டு அந்தக் கம்பிகளில் துணி காயப் போடஆரம்பித்துவிட்டனர் மக்கள். இதனால் டி.டி. எனப்படும் அரசின தூர்தர்ஷனைக் கூட பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
சில இடங்களில் கடும் போட்டியில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒருவரை ஒருவர் வெல்வதற்காக டிவி நிகழ்ச்சிகளைஒளிபரப்பி வருகின்றனர். அந்தப் பகுதி மக்கள் தப்பிவிட்டனர்.
சென்னையில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் கேபிள் டிவி ஒளிபரப்பு இல்லை. பெங்களூரில் ஒட்டுமொத்த கேபிள் டியும்அவுட். ஹைதராபாத்தில் தொழில் போட்டியால் ஒளிபரப்பு பாதிக்கப்படவில்லை. டெல்லியில் முழு இருட்டடிப்புசெய்யப்பட்டுவிட்டது.
மதுரை, திருச்சி, கோவை, நாகர்கோவில், நெல்லை, சேலம் ஆகிய இடங்களில் கட்டண சேனல்களை மட்டும் கேபிள்டிவிக்காரர்கள் இருட்டடிப்பு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications