பிரபாகரனை சந்திக்கத் தயார்: ரணில்
வாஷிங்டன்:
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்கத் தயார் என்று இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்கே கூறினார்.
இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு கோரி அமெரிக்காவுக்குப்பயணம் மேற்கொண்டுள்ள ரணில் "வாஷிங்டன் டைம்ஸ்" பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியின் போதுஇவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
இந்த அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுபடுவார்கள்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகுஅமெரிக்காவிலுள்ள பல தமிழ் அமைப்புகளும் புலிகளுக்கு நிதி அளித்து வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்தே புலிகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தனர் என்று அந்தப் பத்திரிக்கையில் ரணில்கூறியுள்ளார்.
ஆகஸ்டு 2ல் பேச்சுவார்த்தை?
இதற்கிடையே நேற்று வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய ரணில் ஆகஸ்டு 2ம் தேதி தாய்லாந்தில் பேச்சுவார்த்தைதுவங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த மாத இறுதிக்குள்ளாகவே பேச்சைத் துவக்கி விட வேண்டும் என்று இலங்கை அரசு விரும்பியதாகவும்ஆனால் ஆகஸ்டு 2ம் தேதி பேச்சு நடத்த புலிகள் பரிசீலனை செய்துள்ளதாகவும் தெரிவித்த ரணில் இதற்கு நாங்கள்மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே புலிகள் மீதான தடை விலக்கப்படும் என்று மீண்டும் உறுதியளித்தார் ரணில்.இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இதை ஏற்றுக் கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications