""ராமதாஸ் கோரிக்கையால் தமிழர் ஒற்றுமை சிதையும்"": நெடுமாறன்
சென்னை:
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் கோரிக்கை தமிழர்களின்ஒற்றுமையைச் சிதைத்து விடும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நெடுமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்திலிருந்து நாயக்கர், மராட்டியர், நவாபுகள் ஆட்சிக் காலம் வரையிலும்தமிழகம் ஒன்றுபடாமல் பல பகுதிகளாகப் பிளவுபட்டே கிடந்தது.
பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியின் போது தான் பிற மாநிலப் பகுதிகளுடன் தமிழகத்தையும் இணைத்து சென்னைமாகாணம் உருவானது.
அதைத் தொடர்ந்து மொழி வழி மாநிலப் பிரிவினை கடந்த 1956ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன் பிறகே3,000 ஆண்டுகளாகப் பிளவுபட்டுக் கிடந்த தமிழகம் ஒன்று பட்டது.
தமிழகத்திற்குரிய எல்லைப் பகுதிகளில் பல இன்னமும் நம் மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க நினைப்பது தமிழர் நலனுக்கு எதிரானதாகும். டாக்டர் ராமதாசின்இந்தக் கோரிக்கை தமிழர்களின் ஒற்றுமையையே சிதைத்து விடும்.
அந்தக் கோரிக்கையைக் கைவிடுமாறு நண்பர் ராமதாசை வேண்டிக் கொள்கிறேன் என்று அவ்வறிக்கையில்கூறியுள்ளார் நெடுமாறன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications