போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி இல்லை: தமிழக அரசு மறுப்பு
சென்னை:
தமிழகத்தில் போலீஸ் சங்கம் அமைக்க அனுமதிக்கப் போவதில்லை என்று தமிழக டி.ஜி.பி. நெய்ல்வால் கூறினார்.
தமிழகத்தில் போலீஸ் சங்கம் அமைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சமீப காலமாகப் போலீசார்கோரிக்கை எழுப்பி வந்தனர்.
போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மற்றும் மணிவண்ணன்,சிவகுமார் ஆகிய முதல்நிலைக் காவலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால் அவற்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி முருகேசன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முதலில் அரசிடம் மனு கொடுத்து விட்டு அங்கு நிராகரிக்கப்பட்டால் நீதிமன்றத்துக்குவாருங்கள் என்று கூறிவிட்டது.
இதையடுத்து தமிழக அரசிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. கடந்த வாரம் அனுமதி பெறாத போலீஸ்சங்க நிர்வாகிகளும் இது குறித்து நெய்ல்வாலுடன் பேச்சு நடத்தி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
இந்நிலையில் தமிழகத்தில் போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி கிடையாது என்று நெய்ல்வால் நேற்றுதிட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
போலீசாரின் குறைகளை அவ்வப்போது தமிழக அரசு தீர்த்து வருகிறது. மேலும் போலீசாரின் குறைகளை நேரில்கேட்டறியப் போவதாக முதல்வர் ஜெயலலிதாவும் சமீபத்தில் கூறியுள்ளார் என்று நெய்வால் அதற்கு விளக்கமும்அளித்தார்.
போலீசார் தங்கள் பிரச்சனைகளை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம் என்றும் இதனால்தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் போலீஸ் சங்கம் தேவையில்லாத ஒன்று என்றும் நெய்ல்வால் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications