கருணாநிதி கைது விவகாரம்: எனக்கு ஒன்னுமே தெரியாது- முத்துக் கருப்பன் சாட்சியம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியைக் கைது செய்வதில் சென்னை நகர போலீசாருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அப்போதைய சென்னைமாநகர போலீஸ் கமிஷ்னர் முத்துக் கருப்பன் சாட்சியம் அளித்தார்.
கருணாநிதி கைது அதைத் தொடர்ந்து நடந்த திமுக பேரணியில் போலீசார் மற்றும் அதிமுகவினர், தாதா வீரமணியின் குப்பத்து ரவுடிகள்நடத்திய வன்மூறை ஆகிய விவகாரங்கள் குறித்து விசாரித்து வரும் நீதிபதி பக்தவச்சலம் கமிஷனிடம் இன்று முத்துக்கருப்பன் சாட்சியம்அளித்தார்.
அந்த வன்முறையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 திமுகவினர் கொல்லப்பட்டனர். பலர் வெட்டப்பட்டனர்.பத்திரிக்கையாளர்களையும் போலீசார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். அந்தப் பேரணியில் வன்முறை வெடிகக் காரணமாக இருந்தரெளடிகளை அழைத்து வந்ததே முத்துக்கருப்பன் தான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறயிருந்தார்.
கருணாநிதி கைது நேரத்தில் அதிமுக தலைமைக்கு நெருக்கமாக இருந்த முத்து பின்னர் அவர்களால் ஒதுக்கப்பட்டார். இப்போது அதிகாரம்இல்லாத ஆயுதப் படை தலைவராக ஒரம் கட்டப்பட்டுள்ளார் முத்து.
இன்று சதாசிவம் கமிஷன் முன் முத்துக்கருப்பன் தந்த சாட்சியத்தின் விவரம்:
மேம்பால ஊழல் தொடர்பான வழக்கை பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தது கிரைம் பிராஞ்ச் சிஐடி போலீசார் தான். அவர்களுக்குசென்னை நகர போலீஸ் உதவி தான் வழங்கியது.
கருணாநிதி கைதை எதிர்த்து திமுக பேரணி நடத்தியபோது நான் பேரணியில் வரவே இல்லை. நான் எனது அலுவலகத்தில் இருந்தவண்ணம்பேரணியைக் கண்காணித்து வந்தேன்.
கலவரம் நடந்த முடிந்த பின்னர் சில நிருபர்கள் தான் போலீசாரின் செயல்பாடு குறித்து குற்றம் சுமத்தினர். ஒரே ஒரு நிருபர் மட்டும் தான்புகார் தந்தார் என்றார் முத்து.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications