திருச்சி ராகிங் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது
திருச்சி:
திருச்சி பெரியார் கல்லூரியில் ராகிங் செய்தவர்களைக் கண்டித்த மாணவர் கொலை தொடர்பாக மேலும் ஒருமாணவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் உள்ள ஈ.வே.ரா. பெரியார் அரசு கலைக் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த ரமேஷ் என்ற மாணவரை கடந்தபுதன்கிழமை சிலர் ராகிங் செய்தனர்.
இதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த ரமேஷின் பெரியப்பா மகனான அழகர்சாமியை ராகிங் செய்த மாணவர்கள்கத்தியால் குத்திக் கொன்று விட்டனர். அழகர்சாமியும் இதே கல்லூரியில் தான் படித்து வந்தார்.
திருச்சியையே உலுக்கிய இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக பிரதீப் மற்றும் ஆனந்தகுமார் ஆகியஇருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஆறுமுகம் என்ற மற்றொரு மாணவரும் கைதுசெய்யப்பட்டார்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் கல்லூரித் தேர்தல் தொடர்பாக அழகர்சாமிக்கும் ஆறுமுகத்திற்கும் முன் விரோதம்இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ராகிங் பிரச்சனையின் போது அழகர்சாமியை ஆறுமுகமும்கூலிப்படையைச் சேர்ந்த வேறு சிலரும் சேர்ந்து கத்தியால் குத்திக் கொன்று விட்டனர்.
இந்நிலையில் அழகர்சாமி கொலையில் தொடர்புடைய செல்வகுமார் என்ற மாணவர் உள்ளிட்ட கூலிப்படையைச்சேர்ந்தவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே அழகர்சாமியைக் கொலை செய்த கூலிப் படையினர் அனைவரையும் கைது செய்யாவிட்டால் வரும்29ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications