எல்லையில் இன்னும் பதற்றம் நிலவுகிறது: பாவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இன்னும் இந்தியாவுக்குள் ஊடுருவிக் கொண்டு தான் உள்ளனர் என்றும் இதனால்காஷ்மீர் எல்லையில் பதற்றம் இன்னும் தணியவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின்பாவல் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்காக மீண்டும் தெற்காசியாவுக்கு வந்துள்ள பாவல் இன்றுடெல்லியில் நிருபர்களிடம் இவ்வாறு கூறினார்.

நேற்று மாலை டெல்லி வந்து சேர்ந்த பாவல், வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை சந்தித்துப்பேசினார்.

பின்னர் இன்று பிரதமர் வாஜ்பாய் மற்றும் துணைப் பிரதமர் அத்வானி ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தினார்பாவல்.

முன்னதாக நிருபர்களிடம் பாவல் பேசுகையில்,

காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று தான். ஆனால் அந்தத் தேர்தலைக்கண்காணிப்பதற்காக சர்வதேசப் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும்.

காஷ்மீரில் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவற்கு உதவ வேண்டும் என்று பாகிஸ்தானிடமும் நான் கேட்டுக்கொள்வேன்.

ஆனாலும் காஷ்மீரில் இன்னும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து ஊடுருவிக் கொண்டு தான் உள்ளனர்.இதனால் எல்லையில் இன்னும் பதற்றம் சிறிதும் தணியாமல் தான் உள்ளது என்றார் பாவெல்.

காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க உடனடியாக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பாவெல்கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகரான பிரஜேஷ் மிஸ்ராவையும் பாவெல் சந்தித்துப் பேசினார்.

பின்னர் இன்று பிற்பகல் அவர் பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றார். காஷ்மீரில் தேர்தல் அமைதியா நடப்பதற்குஉதவுமாறு பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளரான முஷாரப்பை அவர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

ஆனால் பாவெல்லுடன் இன்று இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய முஷாரப், இந்தியாவுக்குள்தற்போது தீவிரவாதிகள் யாரும் ஊடுருவவில்லை என்று குறிப்பிட்டார்.

முஷாரப்பின் இந்தப் பேச்சை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக மறுத்தது. முஷாரப் சொல்வதில்எந்தவிதமான உண்மையும் இல்லை. தீவிரவாதிகளின் ஊடுருவல் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளதுஎன்று அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான நிருபமா ராவ் இன்று மாலை தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+