ஜெ. தொகுதியில் திமுக கஞ்சித் தொட்டி, அதிமுக முட்டை பிரியாணி: வாங்க மறுத்த நெசவாளர்கள்
ஆண்டிப்பட்டி:
பசிக் கொடுமையால் வாடும் ஆண்டிப்பட்டி தொகுதி நெசவாளர்களுக்காக திமுக சார்பில் கஞ்சித் தொட்டிதிறக்கப்பட்டது. இதற்குப் போட்டியாக அதிமுகவினர் முட்டை பிரியாணி வழங்கினர்.
ஆனால் அவற்றைப் பெற்றுக் கொள்ள மறுத்த பல பெண் நெசவாளர்கள் தங்களுக்கு மீண்டும் நெசவுவேலையையும் அதற்குரிய கூலியையும் கொடுத்தால் போதும் என்று கூறி விட்டனர்.
தமிழகம் முழுவதும் நெசவு வேலையின்றி பசியின் கொடுமையால் வாடும் நெசவாளர்களுக்காக திமுகவினர்கஞ்சித் தொட்டி திறக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
அதன்படி ஆண்டிப்பட்டியில் உள்ள ஜக்கம்பட்டி பகவதியம்மன் கோவில் அருகே கஞ்சித் தொட்டி திறக்கவேண்டும் என்று அத்தொகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றியச் செயலாளரும் இடைத் தேர்தலில் முதல்வர்ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவருமான வைகை சேகர் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தார்.
அதற்குள் நெசவாளர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கவும் தேங்கியுள்ள கைத்தறிச் சேலைகளைக்கொள்முதல் செய்யவும் அவர்களுக்குத் தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த இடத்தில் இலவச அரிசி அளிக்கப் போவதாகக் கூறி வைகை சேகருக்கு அனுமதி அளிக்கபோலீசார் மறுத்து விட்டனர். இதனால் அந்த இடத்தை மாற்றி ஜக்கம்பட்டி பிள்ளையார் கோவில் அருகேதிமுகவினர் நேற்று கஞ்சித் தொட்டியைத் திறந்தனர்.
உடனே இதற்குப் போட்டியாக அதிமுகவினர் முட்டை பிரியாணி தயாரித்து நெசவாளர்களுக்கு வழங்கினர்.ராஜ்யசபா எம்.பியான தங்கத்தமிழ்ச் செல்வன் தலைமையில் முட்டை பிரியாணி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த இரு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு கஞ்சியையும் முட்டை பிரியாணியையும் வழங்கியதைப்பார்த்த சில பெண் நெசவாளர்கள், எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம். நெசவு வேலையையும் அதற்கானகூலியையும் கொடுக்க மட்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி அந்தப் பக்கமே போக மறுத்து விட்டனர்.
இதற்கிடையே நெசவாளர்களுக்கு கூப்பன் முறையில் இலவச அரிசி வழங்கப்பட்டது. அதிலும் தற்போதுகூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு அரிசி கிடையாது என்று அதிகாரிகள் கூறியதைத்தொடர்ந்து பல நெசவாளர்கள் வெறும் கையுடன் சோகத்துடன் வீடு திரும்பினர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications