வைகோ கைது ஆவணங்கள் "பொடா" தனி நீதிமன்றத்திற்கு மாற்றம்
மதுரை:
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டது குறித்த ஆவணங்கள்அனைத்தும் பொடாவுக்காக அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
பொடா சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கென்றே சென்னை-பூந்தமல்லியில் தனி நீதிமன்றம் ஒன்றைதமிழக அரசு சமீபத்தில் அமைத்தது.
இந்தத் தனி நீதிமன்றத்தின் நீதிபதியாக நீதிபதி எல். ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இந்தத் தனி நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கு முன்பாகவே வைகோ உள்ளிட்ட ஒன்பது மதிமுகவினர் மீதுவழக்கு தொடரப்பட்டது. பின்னர் அவர்கள் கைதும் செய்யப்பட்டனர்.
இந்தக் கைதுகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் மதுரை மாவட்டம் திருமங்கலம் மாஜிஸ்திரேட்நீதிமன்றத்திலேயே இருந்தன. வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து அவர்கள் ஒன்பது பேரும் கைதானது வரைஅனைத்தையும் இந்த நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட்டான நீதிபதி வெங்கடாசலபதி தான் விசாரித்து வந்தார்.
இந்நிலையில் பூந்தமல்லி தனி நீதிமன்றம் முழு அளவில் தயாராகி விட்டதைத் தொடர்ந்து அனைத்துஆவணங்களையும் திருமங்கலம் நீதிமன்றத்திலிருந்து தனி நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதி வெங்கடாசலபதி நேற்றுஉத்தரவிட்டார்.
இதையடுத்து வைகோ மற்றும் மதிமுகவினருக்கு எதிராகப் பொடா சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குதொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பொடா தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
இனிமேல் இந்தத் தனி நீதிமன்றம் தான் பொடா வழக்குகள் குறித்து விசாரிக்கும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications