பட்டினியைத் தடுக்க கலெக்டர்களுக்கு ஜெ. உத்தரவு
சென்னை:
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாற்று வேலை வாய்ப்பை ஏற்படுத்த மத்திய அரசிடம் ரூ. 423 கோடியை முதல்வர்ஜெயலலிதா கோரியுள்ளார். மேலும் தமிழகத்தில் பட்டினியால் யாரும் பாதிக்கப்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டகலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக வறட்சியை சமாளிக்க மத்திய அரசிடம் தமிழகம் ரூ. 300 கோடி கோரியது. ஆனால், வறட்சியின் கொடூரம் மிக அதிகமாகஇருப்பதால் கூடுதலாக ரூ. 123யைக் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று சென்னை தவிர்த்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். ஒவ்வொருமாவட்ட ஆட்சியரும் கொடுத்த தகவல்கள், வறட்சி குறித்த விவரங்களின் அடிப்படையில் கூடுதலாக நிதி கோர தமிழகம் முடிவுசெய்துள்ளது.
பட்டினி சாவுகள்:
தமிழகத்தில் பட்டினியால் சாவுகள் நடக்க ஆரம்பித்துள்ளதையடுத்து அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.(பட்டினி சாவுகளை முதலில் வெளியிட்டது தட்ஸ்தமிழ்.காம் தான்)
கலெக்டர்கள் மாநாட்டில் பேசிய அவர், மக்களுக்கு குடிநீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்தாக வேண்டும். ஒவ்வொருமாவட்டத்தின் நீர் இருப்பு குறித்த விவரங்களை கலெக்டர்கள் அவ்வப்போது துல்லியமாக அறிந்திருக்க வேண்டும்.
அதிர்ஷ்டவசமாக நம்மிடம் போதிய உணவு தானியம் கையிருப்பு உள்ளது. எனவே, மழையில்லாமல் போனாலும் பசியால் எந்த ஒருகுடிமகனும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. இதை கலெக்டர்கள் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார் ஜெயலலிதா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications