மீண்டும் கட்சிக்கு உயிர் தரும் கண்ணப்பன்
சென்னை:
அதிமுகவில் மீண்டும் இணைவதற்காக போயஸ் கார்டனின் கதவைத் தட்டிப் பார்த்து காத்திருந்து நொந்து போனமுன்னாள் அமைச்சர் எஸ். கண்ணப்பன் தன்னுடைய மக்கள் தமிழ் தேசம் கட்சியைப் புத்துணர்ச்சி பெறச் செய்யும்முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மக்கள் தமிழ் தேசம் கட்சி முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின் போது தான் தொடங்கப்பட்டது. தனது யாதவசமூகத்தினரின் துணையோடு இந்தக் கட்சியைத் தொடங்கினார் கண்ணப்பன். திமுக கூட்டணியிலும் இடம் பெற்றதுஇந்தக் கட்சி.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட மக்கள் தமிழ் தேசம் கட்சி வெற்றிபெறவில்லை.
இதையடுத்து தனது கட்சியை அதிமுகவுடனே மீண்டும் இணைத்து விடலாம் என்று நினைத்தார் கண்ணப்பன்.
இதைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவையெல்லாம் கூட்டிய கண்ணப்பன், அதிமுகவுடன் மீண்டும் இணைவதுஎன்று தீர்மானத்தையும் இயற்றினார்.
ஆனால் அவரை அதிமுகவில் இணைத்துக் கொள்ள முதல்வர் ஜெயலலிதா தயாராக இல்லை. இதுவரை பச்சைக்கொடியும் காட்டவில்லை.
இதனால் கடந்த ஆறு மாதங்களாகக் காத்திருந்து காத்திருந்து நொந்து போய் மூக்கறுபட்ட நிலையில், வேறுவழியில்லாமல் மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்க கண்ணப்பன் முடிவு செய்துள்ளார்.
"இனிமேல் எந்தக் கட்சியுடனும் என்னுடைய கட்சியை இணைக்கப் போவதில்லை. மக்கள் தமிழ் தேசம் கட்சி தனித்தன்மையுடன் செயல்படும்" என்ற சூளுரையுடன் இன்று பத்திரிக்கை நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
யாரும் எங்கள் கட்சியிலிருந்து போய்விடவில்லை. யாரும் எங்கள் கட்சியினரை மிரட்டவும் இல்லை. வரும்ஆகஸ்டு 20ம் தேதி மக்கள் தமிழ் தேசம் கட்சியின் 3வது ஆண்டு துவக்க விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்என்றும் நிருபர்களிடம் கண்ணப்பன் கூறினார்.
ஆனால் இந்திய வங்கியின் முன்னாள் சேர்மன் எம். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல மக்கள் தமிழ் தேசம்கட்சியினர் ஏற்கனவே அதிமுகவில் சேர்ந்து விட்டனர்.
இந்த நிலையில் கண்ணப்பன் எப்படி தன்னுடைய கட்சிக்குப் புத்துயிர் கொடுப்பார்? எல்லாம் போகப் போகத் தான்தெரியும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications