மத்திய கூட்டணியில் இருந்து மம்தா விலகல்?
கொல்கத்தா:
மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி மீண்டும் வெளியேறுவார் என்று தெரிகிறது. மத்தியஅரசாங்கத்தில் துணைப் பிரதமர் அத்வானியால் பிரதமர் வாஜ்பாய் ஓரம்கட்டப்படுவதாகவும் மம்தா கூறியுள்ளார்
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு அமைந்துள்ள கிழக்கு ரயில்வேயைப் பிரித்து பிகாரில் உள்ள ஹாஜிபூரைத்தலைமையகமாகக் கொண்டு புதிய ரயில்வே மண்டலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதை மம்தா பானர்ஜி எதிர்த்துவருகிறார்.
இதைக் காரணம் காட்டித் தான் சமீபத்தில் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது அதில் சேர மம்தா மறுத்தார்.
ஜார்ஜ் பெர்னாண்டசின் சமதா கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமார் பிகாரைச் சேர்ந்தவர் என்பதால் கொல்கத்தா மண்டலத்தைப் பிரித்துபிகாரில் புதிய மண்டலம் அமைக்க அவர் திட்டமிடுவதாக பானர்ஜி கூறி வருகிறார்.
அவரது எதிர்ப்பால் இந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. ஆனால், இரு தினங்களுக்கு முன் கூடிய மத்தியஅமைச்சரவைக் கூட்டத்தில் ரயில்வே மண்டலத்தைப் பிரிப்பது என்று இறுதி முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கு அத்வானி தான் காரணம் என மம்தா குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சியில் பிரதமர் வாஜ்பாய்ஓரம்கட்டப்படுகிறார். அவரை ஒதுக்கிவிட்டு அத்வானி தான் முக்கிய முடிவுகளை எடுக்கிறார். வாஜ்பாயை யாரும்மதிப்பதில்லை. இதைச் சுட்டிக் காட்டும் தைரியம் எனது கட்சிக்கு மட்டும் தான் உள்ளது எனவும் மம்தா கூறியுள்ளார்.
இந் நிலையில் அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. அதில், தேசிய ஜனநாயகக்கூட்டணியைவிட்டு வெளியேறுவது குறித்து மம்தா பானர்ஜி முடிவு செய்வார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications