பிளஸ் டூ - செப்டம்பர் மறு தேர்வு: ஆகஸ்டு 7 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை:
வரும் செப்டம்பர் மாதம் பிளஸ் டூ மறு தேர்வு எழுத விரும்பும் மாணவ-மாணவிகள் வரும் ஆகஸ்டு 7ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை இயக்குநர் பழனிவேலு தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் டூ தேர்வுகளில் ஓரிரண்டு பாடங்களில் தோல்வியடைந்தமாணவ-மாணவிகளுக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் உடனடி சிறப்பு மறு தேர்வு நடத்தப்பட்டது.
இதில் சுமார் 50 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் அவர்கள் இந்த ஆண்டேதங்களுடைய மேற்படிப்பைத் தொடர வாய்ப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு வழக்கமாக நடைபெறும் செப்டம்பர்தேர்வுகளுக்காக விண்ணப்பம் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தக் கடைசி நாள் வரும் ஆகஸ்டு 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் மாதம் மறு தேர்வு எழுத விரும்பும் மாணவ-மாணவிகள் மாவட்ட முதன்மை கல்விஅலுவலகத்திற்கோ அல்லது மண்டல அலுவலகத்திற்கோ நேரடியாக வந்து தங்கள் விண்ணப்பங்களைச் செலுத்தவேண்டும் என்றும் தபால் மற்றும் கூரியர்களின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும்பழனிவேலு கூறினார்.












Click it and Unblock the Notifications