பாண்டியன், சேரன், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
சென்னை:
வரும் செப்ட்ம்பர் மாதம் முதல் சென்னையிலிருந்து புறப்படும் சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள்இணைக்கப்படுகின்றன.
இது தொடர்பாக தென்னக ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்குச் செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஏ.சி. பெட்டியும் ஒருதூங்கும் வசதி கொண்ட பெட்டியும் கூடுதலாக இணைக்கப்படவுள்ளன. வரும் செப்டம்பர் 10ம் தேதி முதல் இவைஇணைக்கப்படும்.
மதுரையிலிருந்து சென்னை வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்சில் செப்டம்பர் 11 முதல் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.
அதே போல் சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ்சில் செப்டம்பர்30ம் தேதி முதல் ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் ஏ.சி. பெட்டி வசதிதொடங்கும்.
சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலிலும் செப்டம்பர் 10ம்தேதி முதல் கூடுதலாக ஒரு தூங்கும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும். செப்டம்பர் 11ம் தேதி முதல்தஞ்சாவூர்-சென்னை ரயிலில் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.
அதே போல் சென்னையிலிருந்து மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூர் வரை ஒரு தூங்கும்வசதிப் பெட்டியும் மைசூர் வரை ஒரு ஏ.சி. பெட்டியும் இணைக்கப்படும்.
மறுமார்க்கத்தில் 11ம் தேதி முதல் இவ்வசதிகள் அமல்படுத்தப்படும்.
இதற்கிடையே சென்னையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கோயம்புத்தூர் ஒருதூங்கும் வசதி கொண்ட பெட்டியும் மேட்டுப்பாளையம் வரை மற்றொரு தூங்கும் வசதிப் பெட்டியும் செப்டம்பர்10ம் தேதி முதல் இணைக்கப்படவுள்ளன.
கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்திலிருந்து செப்டம்பர் 11ம் தேதி முதல் நீலகிரி எக்ஸ்பிரசில் இந்த வசதிகள்ஏற்படுத்தப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அரியலூரில் "பாண்டியன்" நிற்கும்:
இதற்கிடையே நாளை (ஆகஸ்டு 1) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை அரியலூரிலும் பாண்டியன்எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் என்றும் தென்னக ரயில்வே கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications