நாளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுகிறார் வைகோ
வேலூர்:
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நீதிமன்றக் காவல் முடிவடைவதைத் தொடர்ந்து நாளை அவர் வேலூர் சிறையிலிருந்து சென்னையில் உள்ள பொடா தனி நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படுகிறார்.
கடந்த ஜூன் 29ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வைகோ, ஜூலை 11ம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் வைகோவை 28 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க திருமங்கலம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி வெங்கடாஜலபதி உத்தரவிட்டார். இதையடுத்து வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே பொடா சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னை-பூந்தமல்லியில் தனி நீதிமன்றத்தை தமிழக அரசு அமைத்தது. நீதிபதி எல். ராஜேந்திரன் பொடா தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் வைகோவின் நீதிமன்றக் காவல் நாளையுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது.
இதையடுத்து நாளை வேலூர் சிறையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்படும் வைகோ, பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
வைகோவின் காவலை நீட்டிக்கச் சொல்லி க்யூ பிராஞ்ச் போலீசார் பொடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார்கள்.வைகோ வீட்டில் சோதனை நடத்த "க்யூ" பிராஞ்ச் போலீசார் மீண்டும் மனு
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications