ரேஷன் கடைகளில் மலிவு விலை வேஷ்டி-சேலை விற்பனை: ஜெ. துவக்கி வைத்தார்
சென்னை:
கைத்தறி நெசவாளர்கள் சங்கங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட வேஷ்டி மற்றும் சேலைகளின் விற்பனையை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.
சென்னை-அசோக் நகரில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட ஒரு ரேஷன் கடையில் ஒரு வேஷ்டியையும் சேலையையும் பணம் கொடுத்து வாங்கி இந்த விற்பனையைத் துவக்கினார் ஜெயலலிதா.
கடுமையான வறுமை, பசி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏழை நெசவாளர்களுக்கு கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன. தமிழக அரசு வழங்கி வந்த இலவச வேஷ்டி-சேலை திட்டம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்தே நெசவாளர்களுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏழை நெசவாளர்களுக்கு 20 கிலோ அரிசி வழங்க உத்தரவிட்ட ஜெயலலிதா, தமிழகம் முழுவதிலும் உள்ள கைத்தறி நெசவாளர் சங்கங்களில் தேங்கிக் கிடந்த வேஷ்டி மற்றும் சேலைகளைக் கொள்முதல் செய்ய ரூ.25 கோடியை ஒதுக்கினார்.
இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட வேஷ்டிகளையும் சேலைகளையும் ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் விற்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார். வேஷ்டியின் விலை ரூ.30 என்றும் சேலையின் விலை ரூ.40 என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள 45,000 ரேஷன் கடைகளில் மலிவு விலை கைத்தறி வேஷ்டிகள் மற்றும் சேலைகளின் விற்பனை தொடங்கியது.
சென்னையில் அசோக் நகரில் புதிதாகத் திறக்கப்பட்ட ரேஷன் கடையில் இன்று மலிவு விலை வேஷ்டி-சேலை விற்பனையை ஜெயலலிதா துவக்கி வைத்தார். அவர் ரூ.70 பணம் செலுத்தி ஒரு வேஷ்டியையும் சேலையையும் பெற்றுக் கொண்டார்.
அதே நேரத்திலேயே தமிழகத்தில் உள்ள மற்ற ரேஷன் கடைகளிலும் மலிவு விலை வேஷ்டி-சேலை விற்பனை தொடங்கியது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications