இப்படியும் ஒரு எம்.எல்.ஏ!
சென்னை:
இடம்: சென்னை, நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்.
நேரம்: 5ம் தேதி, மாலை 3.15 மணி.
என்ன ஆச்சு?: 50 வயதைக் கடந்த ஒருவர் கையில் ஒரு பைலுடன் நின்று கொண்டிருக்கிறார். கசங்கிய சட்டை, ரப்பர் செருப்பு. அதுவும் தேய்ந்துபோய் இப்பவோ அப்பவோ என்று உயிருக்கு ஊசாலாடிக் கொண்டிருக்கும் செருப்பு.
ஆட்டோவில் செல்வதற்காக ஆட்டோவை நிறுத்துகிறார். ஆனால், அந்த ஆட்டோ ஓட்டுனர் கேட்ட தொகையை கேட்டுவிட்டு, தம்பி அவ்வளவு காசு என்கிட்ட இல்லை. நியாயமா கேளு என்கிறார்.
அவரைத் திட்டிவிட்டு ஆட்டோ சென்றுவிடுகிறது. இது போல பல ஆட்டோக்கள்.
ஆனால், அந்த நபரும் பொறுமை இழக்காமல் ஆட்டோ தேடிக் கொண்டிருந்தார்.
ஆட்டோ பிடிக்க இப்படி அலைபாய்ந்து கொண்டிருந்தவர் ஒரு எம்.எல்.ஏ. என்பதுதான் நியூஸ். அவரது பெயர் ஹேமச்சந்திரன்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. நுங்கம்பாக்கத்திற்கு ஒரு வேலையாக வந்தவர் அதை முடித்துக் கொண்டு எம்.எல்.ஏ. விடுதிக்கு செல்லவே ஆட்டோவுக்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.
நம் வழக்கமான அரசியல்வாதிகளை சுற்றி புரோட்டா, பிரியாணி, ஒயினுக்கு அலையும் முரட்டு கைத்தடிகள் கூட்டம் இல்லை.
இவ்வளவு எளிமையாக நம் ஊரில் ஒரு அரசியல்வாதி. அதிலும் எம்.எல்.ஏவா? ஆச்சரியமாய் இருந்தது.
விசாரித்தபோது தெரிந்தது, அவரிடம் டி.வி.எஸ். 50 கூட கிடையாதாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications