பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை விடுதலை செய்த மகளிர் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி குற்றம் சாட்டப்பட்டிருந்த நபரை சென்னை மகளிர் நீதிமன்றம்விடுதலை செய்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை நகரங்களில் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மகளிர் நீதிமன்றம் அளிக்கும் இரண்டாவது தண்டனையாகும் இது. முதலாவது வழக்கில் பாலியல்பலாத்காரம் செய்த ஒரு குற்றவாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதம் விதித்துநீதிபதி விமலா தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இரண்டாவது வழக்கில் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்த நபரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சம்பந்தப்பட்ட நபரின் பெயர் ராஜு. இவர் கடந்த 1997ம் ஆண்டு குமுதவள்ளி என்ற பெண்ணைக் கடத்திச் சென்றுபாலியல் பலாத்காரம் செய்ததாகப் போலீஸார் கைது செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விமலா தன் தீர்ப்பில்,

ராஜுவின் மீதான புகார்கள் எந்தவிதத்திலும் நிரூபிக்கப்படவில்லை. மேலும், ராஜு தன்னை பாலியல் பலாத்காரம்செய்ததாகக் கூறப்படுவதை குமுதவள்ளியே மறுத்துள்ளார். அவரை விரும்பியே கல்யாணம் செய்துகொண்டதாகவும் கூறுகிறார்.

மேலும் தொடர்ந்து ராஜுவுடன் குடும்பம் நடத்துவதற்காக அவர் விரும்பியே தன்னை இழக்க சம்மதித்துள்ளார்என்று தெரிய வருகிறது.

எனவே பாலியல் பலாத்காரம் செய்த வழக்கிலிருந்து ராஜுவை விடுதலை செய்து உத்தரவிடுகிறேன் என்று தன்தீர்ப்பில் கூறினார் நீதிபதி விமலா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+