""ஊரையே காலி செய்யும் அளவுக்கு வறட்சி இல்லை""
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஊரையே காலி செய்து விட்டு பிழைப்பு தேடி வேறு இடத்திற்குப் போகும் அளவுக்கு தமிழகத்தில் எங்கும் வறட்சிஏற்பட்டிருக்கவில்லை என்று வருவாய்த்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறினார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் ஊரையே காலி செய்து விட்டு பிழைப்பு தேடி வேறு இடத்திற்குப் போகும் வகையில் எங்குமே வறட்சிகாணப்படவில்லை.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மட்டுமே அந்தப் பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, விவசாயிகளுக்குநிலவரியை ரத்து செய்ய முடியும்.
தமிழக அரசு வறட்சி நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.47 கோடியை ஒதுக்கியது. அதன் பிறகு ரூ.27 கோடியைஒதுக்கியது. ஆனால் மத்திய அரசிடமிருந்து இதுவரை ஒரு உதவியும் வரவில்லை என்றார் தளவாய் சுந்தரம்.












Click it and Unblock the Notifications