குஜராத் கலவரப் பகுதிகளில் கலாம்
அகமதாபாத்:
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 2 நாள் பயணமாக இன்று பிற்பகல் குஜராத் சென்றார். ஆனால் அவர் கலந்துகொள்ளும் சில நிகழ்ச்சிகளில் பத்திரிக்கை நிருபர்கள் வரக் கூடாது என்று குஜராத் அரசு தடை விதித்துள்ளது.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக டாக்டர் கலாம் இந்த அதிகாரப்பூர்வ சுற்றுப் பயணத்தைமேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் சமீபத்தில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தில் டாக்டர் கலாம் பயணம் மேற்கொண்டுபாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவிருப்பதால் இந்தப் பயணம் மேலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
காந்தியடிகளின் மீது மிகவும் பற்றுள்ள டாக்டல் கலாம் முதலில் நேராக சபர்மதி ஆசிரமத்துக்குத் தான் சென்றார்.அங்கு காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் அங்குள்ள பள்ளி மாணவ-மாணவிகளை டாக்டர் கலாம் சந்தித்துப் பேசினார். அவரை வரவேற்றுஅவர்கள் மெல்லிய குரலில் பாடிய போது, "நீங்களெல்லாம் இன்று காலையில் சாப்பிடவில்லையா? நன்றாகச்சத்தமாகப் பாடுங்கள்" என்று ஒரு ஆசிரியர் போன்ற தோரணையுடன் பேசி அவர்களைக் கவர்ந்தார் டாக்டர்கலாம்.
காலம் சென்ற பிரபல விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் வீட்டுக்கும் செல்லும் டாக்டர் கலாம், அவருடையமனைவியான மிருணாளினி சாராபாயைச் சந்தித்துப் பேசுகிறார். இன்று தான் விக்ரம் சாராபாயின் பிறந்த நாள்என்பதும் விக்ரம் சாராபாயுடன் சேர்ந்து தான் டாக்டர் கலாம் எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை முதன் முதலாகவடிவமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் வன்முறையால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்குச் செல்லும் சிறுபான்மை இன மக்களிடையே டாக்டர்கலாம் உரையாற்றவுள்ளார். அகமதாபாத்தில் இதற்கான மேடை அமைக்கப்பட்டு அங்கு பலத்த போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மேலும் டாக்டர் கலாமை வரவேற்பதற்கான அனைத்துப் பணிகளும் வெகு வேகமாக நடந்து வருகின்றன.
ஆனால் டாக்டர் கலாமின் வருகை குறித்து பா.ஜ.கவும் வி.எச்.பியும் அதிருப்தி அடைந்துள்ளன. குஜராத்தில் அம்மாநில பா.ஜ.க. அரசே வன்முறையை தலைமை வகித்து நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து டாக்டர் கலாம் கலந்து கொள்ளும் சில நிகழ்ச்சிகளில் பத்திரிக்கை நிருபர்கள் வருவதற்கு குஜராத்அரசு தடை விதித்துள்ளது.
சபர்மதி ஆசிரமம் மற்றும் நரோடா பாட்டியா ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மட்டும் நிருபர்கள்கலந்து கொள்ளலாம் என்றும் ஜுகாபூரா மற்றும் ஹஜ் ஹவுஸ் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் டாக்டர்கலாம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் நிருபர்களோ தொலைக்காட்சி படப்பிடிப்புக் குழுவினரோஅனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
இதனால் பத்திரிக்யாைளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குஜராத் அரசின் இந்தக் கட்டுப்பாடுகள் பத்திரிக்கைசுதந்திரத்தையே ஒடுக்கியுள்ளது என்று நிருபர்கள் புகார் கூறுகின்றனர்.
இதற்கிடையே மதக் கலவரத்தால் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உதவித் தொகை தரமறுத்து வந்த மாநில அரசு, கலாமின் வருகையை ஒட்டி அவசர அவசரமாக உதவித் தொகைகளை வழங்கியுள்ளது.
ஹஜ் ஹவுஸ் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு நேற்று இரவோடு இரவாக குஜராத் அரசு நிதி உதவியைஅளித்துள்ளது.
நேற்று இரவு 10 மணிக்கு மேல் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ரூ.1,250 வரை கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிவருகிறார் என்பதற்காக எங்களுக்குப் பணம் கொடுத்து சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று முகாமிலிருந்தஒருவர் தெரிவித்தார். ஆனால் பணம் கொடுக்கப்பட்டதை முகாம் அதிகாரிகள் மறுத்தனர்.
இதற்கிடையே டாக்டர் கலாம் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷா ஆலம் என்ற முகாமைநடத்தி வரும் ஷரீப் கான் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். முகாம்களை அரசு மூடிவிட்டதால் முஸ்லீம்அமைப்புகள் நடத்தும் முகாம்களில் தான் ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர் தங்கியுள்ளனர்.
ஷரீப் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து "ஷா ஆலம்" முகாமில் தங்கியுள்ள 4,000க்கும் மேற்பட்டசிறுபான்மையினர் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications