என் வூட்டுக்காரரு அடிச்சா என்ன தப்பு? ஒரு பகீர் ஆய்வு முடிவு
கோயம்புத்தூர்:
கணவன் தங்களை அடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என திருமணமான 72 சதவீத தமிழக பெண்கள் கருதுவதாக ஆய்வில்தெரியவந்துள்ளது.
இந்த அதிர்ச்சியான விவரம் தேசிய குடும்ப நல வாரியம் நடத்திய சர்வேயில் தெரியவந்தது.
மனைவியை கணவன் தாக்குவதைக் கண்டித்து மனித உரிமை அமைப்புகளும் பெண்கள் நல அமைப்புகளும் குரல் கொடுத்துவரும் நிலையில் எங்களை எங்கள் கணவர் அடிச்சா என்ன தப்பு என்றரீதியில் பெண்கள் பதில் கூறியுள்ளது சர்வேநடத்தியவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டை சரியாக கவனிக்காதது, குழந்தைகளை சரியாக பராமரிக்காதது ஆகியவை தான் மனைவியை கணவன் அடிக்க மிகமுக்கியமான 2 காரணங்களாக அமைந்துள்ளதாகவும் இந்த சர்வே முடிவு கூறுகிறது.
இது தவிர கணவரின் அனுமதி இல்லாமல் வெளியே செல்வது, கணவரின் பெற்றோருக்கு உரிய மரியாதை தராதது, சரியாகசமைக்காதது, கணவரின் நம்பிக்கைக்கு உரிய வகையில் இல்லாதது. இந்த காரணங்களாலும் தங்களை கணவர் தாக்குவதாகமனைவிமார்கள் கூறுவதாக சர்வேயில் தெரியவந்துள்ளது.
தங்களை கணவர் தாக்குவதை அதிகமாக ஆதரித்துள்ளது கிராமப் புற பெண்கள் தான். வசதியான குடும்பங்களிலும் மனைவியைகணவன் அடிப்பது வழக்கத்தில் உள்ளதாகவும் தெரியவருகிறது.
தமிழகத்தில் 15 வயதுக்கு மேலான பெண்களில் 40.4 சதவீதப் பேர் கணவன் மற்றும் வீட்டிலுள்ள மற்றவர்களால்தாக்கப்படுகின்றனர். இந்திய அளவில் வீடுகளில் பெண்கள் தாக்கப்படுவது 21 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் இது 40சதவீதமாக இருப்பது பெரும் அதிர்சசியைத் தந்துள்ளது.
குழந்தையில்லாத பெண்கள் அதிக அளவில் தாக்கப்பட்டு வருகின்றனர். சமூகத்தின் கீழ் மட்டத்தில் உள்ள குடும்பங்களில்மனைவியை கணவன் தாக்குவது அதிகமாக உள்ளது என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கல்வி மூலம் தான் இது போன்ற வீட்டு வன்முறைகளைத் தடுக்க முடியும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications