ரஜினி ரசிகர்கள் மிரட்டலை சந்திக்க தயார்: பா.ம.க. அறிவிப்பு
சென்னை:
ராமதாஸைத் தாக்கி ரசிகர் மன்றத்தினர் அறிக்கை வெளியிட்டு வருவதை ரஜினி தடுத்து நிறுத்த வேண்டும் என பா.ம.க.கூறியுள்ளது.
ரஜினியை பா.ம.கா விமர்சிக்க ஆரம்பித்துள்ளதையடுத்து ராமதாஸை விமர்சித்து தமிழகம் முழுவதும் மிகக் கேவலமானபோஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மிக மோசமான சொற்கள் இந்தப் போஸ்டர்களை அலங்கரிக்கின்றன.
ராமதாசுக்கு எதிராக ரஜினியோ அவரது ரகிசர் மன்றத் தலைவர் சத்தியநாராயணனோ இதுவரை அறிக்கை ஏதும்வெளியிடவில்லை. ஆனால், ரஜினி ரசிகர் மன்றங்கள் சார்பில் ராமதாஸைக் கண்டித்து அறிக்கைகள் குவிந்து வருகின்றன.
இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
இளைஞர்களை குடி, புகை பழக்கங்களில் இருந்து விடுவிக்க ஆக்கப்பூர்வமாக ராமதாஸ் பேசியபோது சிலரது பெயரை (ரஜினிபெயர்) குறிப்பிட வேண்டி வந்தது.
ஆனால், இதற்காக ராமதாஸை விமர்சித்து அறிக்கைகள் விட்டு வருவதை ரஜினி ரசிகர்கள் நிறுத்திக் கொள்ளாவிட்டால் கடும்விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். அவர்களை எதிர்கொள்வது என்பது பா.ம.கவுக்கு பெரிய விஷயமில்லை.
எதிர்கால சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பேசினால் அது தவறா? சினிமாவைப் பார்த்து அதைப் போலவேநிஜ வாழ்க்கையிலும் நடந்து கொள்ள இளைஞர்கள் முயலக் கூடாது. அது அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிவிடும்.
இதைச் சொல்லும்போது சிலரது பெயரைச் சுட்டிக் காட்ட வேண்டி வந்தது. அதற்காக இப்போது ரசிகர் மன்றம் என்ற பெயரில் யார்யாரோ அதைக் கண்டித்து அறிக்கை வெளியிடுகிறார்கள். அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு ரஜினிக்கு உண்டு.
ரஜினிக்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் வெளியிட்டு அறிக்கையில் அமெரிக்காவில் ரீகன் அரசியலுக்கு வந்துஅதிபராகவில்லையா என்று கேட்டுள்ளார். ஆனால், ரீகனுக்கு எங்காவது ரசிகர் மன்றம் இருந்ததா?
இப்போது உலகின் முன்னணி நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் என்ற அமைப்பு உள்ளதா?
தமிழகத்தில் மட்டும் ஏன் இப்படி மக்களை முட்டாளாக்கி வருகிறார்கள்?
ரஜினி ரசிகர்களின் மிரட்டலைச் சந்திக்க எங்கள் கட்சி தயார். இவ்வாறு ஜி.கே. மணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இந் நிலையில் கர்நாடகத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன. தங்கள்மாநிலத்தைச் சேர்ந்த ரஜினியை பா.ம.க. எதிர்த்து வருவதற்கு கன்னடப் பத்திரிக்கைகள் கண்டனம் தெரிவித்து செய்திகள்வெளியிட்டு வருகின்றன.
ராமதாஸைத் திட்டுவதாகக் கூறிக் கொண்டு ஒட்டுமொத்த தமிழர் அமைப்புகளை அவை கொச்சைப்படுத்தி எழுதி வருகின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications