திமுக மாஜி அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச-ஒழிப்பு போலீஸ் சோதனை
சென்னை:
திமுக முன்னாள் அமைச்சர்களான வீரபாண்டி ஆறுமுகம், ஜெனிபர் சந்திரன் மற்றும் அதிமுகவில் இருந்து திமுகவுக்குத் தாவிய முன்னாள்அமைச்சர் ரகுபதி, ப.சிதம்பரத்தின் வலது கரமான ரங்கநாதன் ஆகியோரின் 29 வீடுகள், அலுவலகங்களில் இன்று காலை முதல்லஞ்ச-ஒழிப்புப் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர்.
வருமானத்துக்கு மீறி இவர்கள் கோடிக்கணக்கில் சொத்துக்கள் குவித்துள்ளதால் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்ட்டன. திலகவதிஐ.பி.எஸ்சின் நேரடிக் கண்காணிப்பில் இந்த ரெய்டுகள் நடந்தன.
சென்னை, சேலத்தில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் வீடுகள், பெட்ரோல் பங்குகள், சென்னை, தூத்துக்குடி, திருச்செந்தூரில் உள்ளஜெனிபர் சந்திரனின் வீடுகள், சென்னை, புதுக்கோட்டையில் உள்ள ரகுபதியின் வீடுகள், கல்லூரி, ரங்கநாதனின் சென்னை வீடு,அலுவலகத்தில் இந்தச் சோதனைகள் நடந்தன.
வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சேலத்தில் பல கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. அவர் அமைச்சராக இருந்த காலத்தில் சேலத்தில் நடந்த கட்டப்பஞ்சாயத்துகளில் அவரது மகனின் பெயர் அடிபட்டது. கட்டப் பஞ்சாயத்து என்ற பெயரில் பலருக்குச் சொந்தமான கோடிக்கணக்கானமதிப்புள்ள இடங்கள், கட்டடங்களை வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் சுருட்டியுள்ளனர்.
சென்னையில் மட்டும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு 3 பங்களாக்கள் உள்ளன. சேலம் பூலாவாரியில் உள்ள வீடு, சென்னை தி.நகரில் உள்ளவீடு, செங்குன்றம் வீடு மற்றும் இன்னொரு வீட்டிலும் இன்று காலை முதல் சோதனைகள் நடந்தன.
வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சேலத்தில் 2 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இங்கும் தர்மபுரியில் உள்ள அவரது மகளின் வீட்டிலும் ரெய்ட்நடந்தது.
வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அப்போதைய சேலம் போலீஸ் கமிஷ்னர் ராமநாதனும்கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார். சமீபத்தில் தான் ராமநாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு கோடிக்கணக்கான மதிப்புள்ளசொதுக்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே போல சேலம் மாவட்டத்தில் வெறும் 300 போரிங்குகள் அமைக்க ரூ. 3.5 கோடி வரை அப்போதைய மாநகராட்சி செலவிட்டது.இந்த ஊழலிலும் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீதும் பிற திமுகவினர் மீதும் புகார் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில்...
இதே போல திமுகவின் மிக முக்கிய புள்ளியின் மகளும் முன்னாள் அமைச்சருமான ஜெனீபர் சந்திரனின் சென்னை மற்றும் திருச்செந்தூர்,தூத்துக்குடி வீடுகளிலும் அலுவலகத்திலும் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடந்தது.
மீன் வளத்துறை அமைச்சராக இருந்த ஜெனீபர் சந்திரன் ஸ்டானின் ஆதரவைப் பெற்றவர். திமுக ஆட்சியில் மீன் வளத்துறை அமைச்சராகஇருந்தபோது நாகப்பட்டிணத்தில் மீனவர் குடியிருப்பு கட்டுவதில் இவர் ரூ. 1.76 ஊழல் செய்ததாகக் கூறப்படுகிறது.
ரகுபதி வீட்டில்...
அதே போல அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது கோடிக்கணக்கில் ஊழல் செய்துவிட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்தக்கட்சிக்கு மாறிய ரகுபதியில் வீடுகளிலும் சோதனைகள் நடந்தன.
அவரது சென்னை வீட்டிலும் புதுக்கோட்டை வீட்டிலும் இன்று காலை முதல் லஞ்ச-ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தி வருகின்றன.பதவியில் இருந்தபோது சுட்ட பணத்தில் இவர் அவ்வப்போது சினிமாக்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தது.
கார்த்திக்கை வைத்து அழகான நாட்கள் படத்தை பினாமியாகத் தயாரித்தது இவர் தான் என்று கூறப்படுகிறது. மேலும் பல படங்களுக்குபைனான்ஸ் செய்துள்ளார் ரகுபதி.
இவரது மகள் ஜெ.ஜெ. கல்லூரி என்ற பெயரில் பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். இங்கும் சோதனை நடத்தப்பட்டது. மேலும்மாமனார், மருமகன், உறவினர்கள், சையத் என்ற நண்பர் ஆகியோரின் வீடுகளிலும் சோதனைகள் நடந்தன. இவருக்கு நெருக்கமானபுதுக்கோட்டை முன்னாள் பால்வளத்துறைத் தலைவரின் வீட்டிலும் ரெய்ட் நடந்தது.
இவருக்கு கோடம்பாக்கம், பாண்டிபஜாரில் அலுவலகங்கள் உள்ளன. இங்கும் லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் சோதனைகள் நடந்தன.
ப.சியின் வலது கரம்:
அரசியலில் நேர்மை பேசி வரும் ப.சிதம்பரத்தின் வலதுகரமாகக் கருதப்படும் புரசைவாக்கம் ரங்கநாதனிடம் பல கோடிக்கு சொத்துக்கள்உள்ளன. இவரது பெரம்பூர் வீட்டிலும், வினோத் ஏஜென்சீஸ் என்ற இவரது மகனின் பெயரில் உள்ள கேபிள் டிவி அலுவலத்திலும் இன்றுகாலை முதல் அதிரடி சோதனைகள் நடந்தன.
இவரும் கட்டப் பஞ்சாயத்து, அண்ணா நகர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் கேபிள் டிவி பிசினஸ் மற்றும் வட்டி கடைகள்மூலம் சொத்துக்களைக் குவித்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளில் பொருளாதாரரீதியில் இவரது அசுர வளர்ச்சி பலரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. கட்டப் பஞ்சாயத்து தான் இவரதுமுக்கிய தொழில் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலையில் தொடங்கிய ரெய்டுகள் மாலை வரை நீடித்தன.
வீரபாண்டி ஆறுமுகம் பேட்டி:
சேலத்தில் பூலாவாரியில் உள்ள தனது வீட்டில் ரெய்ட் நடந்து கொண்டிருந்தபோது வெளியில் நிருபர்களிடம் பேசிய வீரபாண்டி ஆறுமுகம்,
லஞ்சம், ஊழல் என்றாலே யாருடைய பெயர் நினைவுக்கு வரும் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 15 மாதங்களில் அதிமுகவினர்செய்துள்ள ஊழல்களையும் பதிவு செய்து அதிமுகவினர் வீட்டில் ரெய்ட் நடத்துவார்களா இந்த லஞ்ச- ஒழிப்புப் போலீசார்?.
இது போன்ற ரெய்டுகளால் திமுகவினரை அச்சுறுத்திவிட முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications