5 த.மா.கா. எம்.எல்.ஏக்களின் பதவி தப்புமா?
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நீடிப்பதாக கடிதம் கொடுத்துள்ள 5 எம்.எல்.ஏக்களின் பதவி குறித்துசட்ட நிபுணர்களுடன் கலந்து பேசிய பிறகே முடிவு செய்ய முடியும் என்று தமிழக சட்டசபை சபாநாயகர்காளிமுத்து கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்து விட்டது. ஆனால் தமாகாவைச் சேர்ந்த 5எம்.எல்.ஏக்கள் தாங்கள் தமாகாவிலேயே நீடிப்பதாகவும், தங்களை தமாகா எம்.எல்.ஏக்களாகவே தொடர்ந்துஅங்கீகரிக்குமாறும் கோரி சபாநாயகர் காளிமுத்துவிடம் மனு கொடுத்துள்ளனர்.
இவர்களது கதி என்ன என்று செய்தியாளர்கள் காளிமுத்துவிடம் கேட்டபோது, இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன்கலந்து பேசி வருகிறோம். அதன் பிறகே இவர்களது பதவி குறித்து முடிவு செய்யப்படும்.
விரைவில் எனது முடிவை அறிவிப்பேன் என்றார் அவர்.
காங்கிரஸை வளர்க்க குழு:
இந் நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் நோக்கில் 30 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவைஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
இதில் காங்கிரஸ் மற்றும் த.மா.காவில் இருந்து வந்தவர்கள் என அனைத்து கோஷ்டிகளுக்கும் பிரதிநிதித்துவம்தரப்பட்டுள்ளது.
வரும் 28ம் தேதி இந்த குழுவின் முதல் கூட்டம் அகில இந்திய பொதுச் செயலாளர் ரமேஷ் சென்னிதாலாதலைமையில் நடக்கிறது. ஒரு மாதத்தில் கட்சி வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து இக்குழு கட்சிமேலிடத்திற்கு அறிக்கை கொடுக்கும்.
இளங்கோவன், ஜி.கே.வாசன், வாழப்பாடி ராமமூர்த்தி, திண்டிவனம் ராமமூர்த்தி, எம்.பி.சுப்ரமணியம், குமரிஅனந்தன், தங்கபாலு ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.
குழுவில் இடம் பெற்றுள்ள மற்றவர்கள்: யசோதா, அருணாச்சலம், பிரபு, மணி சங்கர் ஐய்யர், சுதர்சனம்நாச்சியப்பன், கிருஷ்ணசாமி, அன்பரசு, ராஜசேகரன், பொன் விஜய ராகவன், அப்பாஸ் இப்ராகிம்,எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயந்தி நடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன், ஞானதேசிகன், சோ.பாலகிருஷ்ணன்,அழகிரி, என்.எஸ்.வி.சித்தன், சுதர்சனம், விநாயகமூர்த்தி, பாரமலை, தமிழருவி மணியன், பூவராகவன் ஆகியோர்.
டெல்லி சென்றிருந்த மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ரமேஷ்சென்னிதாலாவை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications