12வது துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் ஷெகாவத்: ஜெ. பங்கேற்பு
டெல்லி:
இந்தியாவின் 12வது துணை ஜனாதிபதியாக மூத்த பா.ஜ.க. தலைவரான பைரோன் சிங் ஷெகாவத் நாளை(திங்கள்கிழமை) பதவியேற்க உள்ளார்.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான ஷெகாவத் கடந்த 12ம் தேதி நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரானசுசில் குமார் ஷிண்டேயை 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து துணை ஜனாதிபதியானார்.
ஷெகாவத்தின் பதவியேற்பு விழா நாளை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுகிறது.
ஜெ. பங்கேற்பு:
இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஷெகாவத் நேற்றுடெலிபோன் மூலம் அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலலிதா நாளை துணை ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.
கடந்த மாதம் 25ம் தேதி இந்தியாவின் ஜனாதிபதியாக டாக்டர் அப்துல் கலாம் பதவியேற்றுக் கொண்ட விழாவிற்குமத்திய அரசு தனக்கு அழைப்பு அனுப்பவில்லை என்று ஜெயலலிதா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுகுறிப்பிடத்தக்கது.
ஆனால் துணைப் பிரதமர் அத்வானி பின்னர் ஜெயலலிதாவிடம் இதற்காக வருத்தம் தெரிவித்தார் என்பதும்நினைவிருக்கலாம்.
கருணாநிதிக்கும் அழைப்பு:
இதற்கிடையே திமுக தலைவர் கருணாநிதிக்கும் ஷெகாவத் பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளார்.
தன்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு ஷெகாவத் அழைத்தார் என்று இன்று சென்னையில் நிருபர்களிடம்கருணாநிதி தெரிவித்தார்.
ஆனால் தன் உடல் நிலை காரணமாகப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இயலாது என்று ஷெகாவத்திடமேகூறிவிட்டதாகவும் கருணாநிதி கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications