காஷ்மீரில் வீர மரணமடைந்த தமிழக வீரர்: தேனியில் உடல் தகனம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

சுதந்திர தினத்தன்று ஜம்மூ-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக வீரரின் உடல்ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் அனுமந்தப்பட்டியைச் சேர்ந்த பாக்கியம் என்பவரின் மகன் உருமராஜ். இந்திய ராணுவத்தில் சேர்ந்துபணியாற்றி வந்த இவர் கடந்த 1998ம் ஆண்டு முதல் காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

சுதந்திர தினத்தன்று ஸ்ரீநகரில் நடந்த மோதலில் தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு உருமராஜ் பலியானார். வீரமரணம்அடைந்த அவரது உடல் நேற்று ஜம்மூவில் இருந்து விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அவரது உடலைப் பெற்றுக் கொண்டு மரியாதைசெலுத்தினர்.

பின்னர் அவரது உடல் ராணுவ வாகனத்தில் அனுமந்தப்பட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் சொந்த ஊருக்குவருவதை அறிந்த சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அனுமந்தப்பட்டியில் குவிந்தனர்.

அவர்கள் உருமராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தங்கத் தமிழ்ச் செல்வன்எம்.பி, தேனி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் உருமராஜின் உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர்.

இதையடுத்து அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+