ஏர்வாடியில் மீண்டும் குவியும் மன நலம் பாதிக்கப்பட்டோர்
ஏர்வாடி:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 மன நலம் பாதிக்கப்பட்டவர்களைப்போலீஸார் மீட்டனர்.
ஏர்வாடி பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சுமார் 28 மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் உடல்கருகி இறந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.
இதைத் தொடர்ந்து ஏர்வாடி பகுதியில் அங்கீகாரம் பெறாமல் மன நலக் காப்பகம் நடத்தி வந்தவர்களை போலீஸார்கண்டுபிடித்து அங்கிருந்த மன நலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சென்னை கீழ்பாக்கம், மதுரை உள்ளிட்ட அரசுமருத்துவமனைகளில் சேர்த்தனர்.
இதைத் தொடர்ந்து கேரளத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வந்த ஏர்வாடி மன நலக் காப்பகங்கள் அனைத்தும்மூடப்பட்டன.
இந்த நிலையில் ஏர்வாடி தர்ஹா பகுதியில் மீண்டும் மன நலக் காப்பகங்கள் உருவாகி விட்டதாக தகவல்கள்வந்தன. இதுதொடர்பாக ஏர்வாடி கிராம நிர்வாக அதிகாரி அமீர் அன்சாரி போலீஸில் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது ஏர்வாடி தர்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் திரிந்த மன நலம் பாதிக்கப்பட்ட 17 பேரை போலீசார் மீட்டனர்.இவர்களை இவர்களது வீட்டினரே தர்காவில் கொண்டு வந்துவிட்டுவிட்டுப் போய்விட்டனர். தாங்கள் எங்கு இருக்கிறோம், என்னசெய்கிறோம் என்று கூட தெரியாத இந்த மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் உடல் முழுவதும் புண்களுடன் தெருவில் கிடப்பதைசாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
இந்த 17 பேரையும் போலீசார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி ராமநாதபுரம் அரசு பொதுமருத்துவமனையில் இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பான்மையினர் தஞ்சாவூர், கம்பம் மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள்.












Click it and Unblock the Notifications