5 எம்.எல்.ஏக்களும் த.மா.காவில் தொடர்வார்கள்: காளிமுத்து தீர்ப்பு
சென்னை:
குமாரதாஸ் தலைமையிலான 5 அதிருப்தி எம்.எல்.ஏக்களும் தொடர்ந்து த.மா.கா. எம்எல்ஏக்களாகவேஅங்கீகரிக்கப்படுவதாக சபாநாயகர் காளிமுத்து தெரிவித்தார்.
இதன்மூலம் அந்த 5 பேரும் சட்டசபையில் த.மா.கா. உறுப்பினர்களாகவே செயல்படுவார்கள் என்றார்.
தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) சமீபத்தில் காங்கிரசுடன் இணைந்தது. ஆனால் இந்த இணைப்புக்கு டாக்டர்குமாரதாஸ், ஹக்கீம், ஈஸ்வரன், மணி நாடார் மற்றும் செ.கு. தமிழரசன் ஆகிய தமாகா எம்.எல்.ஏக்கள் தொடர்ந்துஎதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
காங்கிரசுடன் தமாகா இணைந்து விட்டாலும் தொடர்ந்து தங்களை தமாகா எம்.எல்.ஏக்களாகவே கருத வேண்டும்என்று இந்த ஐந்து பேரும் காளிமுத்துவிடம் மனு அளித்திருந்தனர்.
இதற்கான தீர்ப்பை காளிமுத்து இன்று அளித்தார். இது குறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அவர்கூறுகையில்,
தமாகாவில் தாங்கள் இணையவில்லை என்பதால் தமாகா எம்.எல்.ஏக்களாகவே தங்களை நீடிக்க அனுமதிக்கவேண்டும் என்ற ஐந்து எம்.எல்.ஏக்களின் கடிதங்களை தீவிரமாக பரிசீலித்தேன்.
முந்தைய சட்டசபை நடைமுறைகள் மற்றும் அணுகுமுறைகளின் அடிப்படையில் இந்த ஐந்து பேரும் தமாகாஎம்.எல்.ஏக்களாகவே செயல்படலாம் என்று அனுமதி அளிக்கிறேன்.
சட்டசபையைப் பொறுத்தவரை எனது முடிவே இறுதியானது. மற்ற தமாகா எம்.எல்.ஏக்கள் தாங்கள் காங்கிரஸ்கட்சியில் இணைந்துள்ளது தொடர்பாக இதுவரை எனக்குக் கடிதம் எதையும் அனுப்பவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏக்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட 2 எம்.எல்.ஏக்களும் தங்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு கோரித் தான்எனக்கு கடிதம் கொடுத்தனர்.
தாங்கள் வேறு கட்சியில் சேர்ந்து விட்டதாகவோ அல்லது பாமகவிலிருந்து விலகி விட்டதாகவோ எனக்குக் கடிதம்எதையும் தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
விதிப்படி தமிழக சட்டசபையின் கூட்டம் அடுத்த மாதம் 9ம் தேதி கூட வேண்டும். எனவே 9ம் தேதி சட்டசபைக்கூட்டம் தொடங்கலாம் என்றார் காளிமுத்து.
அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஐந்து பேரும் தமாகாவிலேயே நீடிப்பார்கள் என்று காளிமுத்து கூறியதன் மூலம்தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சி தொடர்ந்து செயல்படுவது நிச்சயமாகி விட்டது.
மூப்பானார் 72வது பிறந்தநாள்:
தமிழ் மாநில காங்கிரசை உருவாக்கிய மூப்பனாரின் 72 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதுவரைதமாகாவின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வந்த சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்உள்ளிட்ட பிரமுகர்கள் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையொட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் பாண்டிச்சேரியிலும் மூப்பனாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாண்டிச்சேரி காங்கிரஸ்தலைவர் நாராயணசாமி உள்ளிட்ட பிரமுகர்கள் மூப்பனாரின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications