ராமநாதபுரம்: பஸ்-ஆட்டோ மோதி ஒரே குடும்பத்தின் 6 பேர் சாவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே சுற்றுலா பஸ்சும் ஆட்டோவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டதில்ஆட்டோவில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த விவசாயி முத்துச்சாமி. இவர் தன் குடும்பத்தினருடன்சிவகங்கையிலிருந்து பஸ்சில் ராமநாதபுரம் வந்தார்.
பின்னர் ராமநாதபுரத்திலிருந்து அனைவரும் ஒரு ஆட்டோவில் சாத்தான்குளத்துக்குச் சென்றனர்.
மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது கரிக்குட்டம் என்ற கிராமத்தின்அருகே எதிரே வந்த ஒரு சுற்றுலா பஸ் இந்த ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஆட்டோ அப்படியே நசுங்கி விட்டது. ஆட்டோவில் பயணம் செய்த முத்துச்சாமி, அவருடைய மனைவிபூர்ணவல்லி, மகன் ராமு, ராமுவின் மனைவி முனீஸ்வரி மற்றும் ராமுவின் மகள் சத்யா ஆகிய ஐந்து பேரும் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ராமுவின் மகன் அருண்குமார் படுகாயமடைந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவன் உயிரிழந்தான். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த ராமுசமீபத்தில் தான் இங்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்துச்சாமியின் உறவினர்களான லிங்கசாமி, தனலட்சுமி மற்றும் அரவிந்த் ஆகியோர் படுகாயங்களுடன்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆட்டோவின் டிரைவர் எந்தவிதமான காயமும் இன்றி தப்பி ஓடி விட்டார்.
ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவில்பட்டியில் போலீஸ் ஜீப் - கார் மோதி 4 பேர் பலி:
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே போலீஸ் ஜீப்பும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரு தம்பதி, ஒரு போலீஸ் ஏட்டு உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
கயத்தாறிலிருந்து அந்த போலீஸ் ஜீப் கோவில்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதில் போலீஸ் ஏட்டு, 2பெண் போலீசார் உள்பட 4 பேர் இருந்தனர்.
கோவில்பட்டியை நெருங்கிக் கொண்டிருக்கும் போது அந்த ஜீப் எதிரே திருமண கோஷ்டியினர் வந்துகொண்டிருந்த ஒரு காருடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
மோதிய வேகத்தில் இரு வாகனங்களுமே கவிழ்ந்தனர். இவ்விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு தம்பதி உள்படமூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த போலீஸ் ஏட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால்வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த தம்பதி தங்களுடைய மகனின் திருமணத்தை முடித்துக் கொண்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications