""பொம்பள வெளிய சுத்தினா..."": "பாபா" வசனத்திற்கு பெண்கள் சங்கம் எதிர்ப்பு
சென்னை:
"பாபா" படத்தில் பெண்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ள வசனத்தை நீக்க வேண்டும் என்று ஜனநாயகமகளிர் சங்கம் வற்புறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"ஆம்பளை வீட்டில இருந்தா கெட்டுப் போயிடுவான். பொம்பளை வெளிய சுத்தினா கெட்டுப் போயிடுவா" என்றவசனம் "பாபா" படத்தில் இடம் பெற்றுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இந்த வசனத்தைப் பேசுகிறார்.
இது பெண்களை மிகவும் அவமதிப்பதாகவும் ஆணாதிக்கத்தின் குரூர வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது.
மேலும் இந்த வசனம் பொது அரங்கிலிருந்து பெண்களை ஓரம் கட்டவும் செய்கிறது. பெண்ணைஉழைப்பாளியாகவும் இந்நாட்டின் பிரஜையாகவும் அங்கீகரிப்பதை இந்த வசனம் தடுக்கிறது. அரசியல் சட்டத்தில்கூறப்பட்டுள்ள பல்வேறு அடிப்படை உரிமைகளையும் கூட இது கேள்விக்குறியாக்கியுள்ளது.
பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டும் என்ற பழமைவாதப் பத்தாம்பசலித் தனமான கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் உள்பட பல்வேறு துறைகளிலும் இருக்கும் பெண்களை இந்த வசனம் மிகவும் இழிவுபடுத்துகிறது.
தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறிக் கொள்ளும் ரஜினி, பெண்களின் நலனைப்பாதிக்கும் வசனத்தைப் பேசுவது முரண்பாடாக உள்ளது
அடிப்படை மனித உரிமைக்கும் சமநீதிக்கும் மதிப்பு அளிக்காத பெண்களுக்கு எதிரான இந்த வசனத்தைப்படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications