மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் மீது வக்கீல்கள் தாக்குதல்
மதுரை:
சிவில் நடைமுறைச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் தமிழக வக்கீல்கள் திடீரென்றுவன்முறையில் இறங்கியுள்ளனர். மதுரையிலும் திருச்சியிலும் அவர்கள் நீதிமன்றத்தில் தாக்குதல்களைநடத்தியுள்ளனர்.
சிவில் நடைமுறைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் வக்கீல்கள்போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 40 நாட்களாக அவர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்திலும்ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நீதிமன்றப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வக்கீல்கள் ஆஜராகாமல் வாதி மற்றும் பிரதிவாதிகளை நேரடியாக விசாரித்து சிவில் வழக்குகளைமுடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையிலேயே தற்போது சிவில் வழக்குகள் நடந்துவருகின்றன. பல சிவில் வழக்குகளை நீதிபதிகள் தள்ளுபடியும் செய்தனர்.
இதற்கிடையே போராட்டம் நடத்தி வரும் வக்கீல்கள் இன்று மதுரையில் திடீர் வன்முறையில் இறங்கினர். மதுரைமாவட்ட சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் ஒரு வழக்கை இன்று விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது நீதிமன்றத்திற்குள் திடீரெனப் புகுந்த வக்கீல்கள் விசாரணையை நிறுத்துமாறு நீதிபதியிடம் கூறினர்.அவர் மறுக்கவே, வன்முறையில் இறங்கினர். நீதிமன்றக் கதவுகளையும் ஜன்னல்களையும் உருட்டுக் கட்டைகளால்அடித்து உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த அவர்கள் கதவுகளையும் ஜன்னல்களையும் உள்புறமாகப் பூட்டிவிட்டனர்.
பின்னர் அங்கிருந்த மேஜை, நாற்காலிகளையும் தூக்கி எறிந்து அவற்றை அடித்து நொறுக்கினர். வழக்கைவிசாரித்துக் கொண்டிருந்த நீதிபதி உள்ளே இருக்கும் போதே வக்கீல்கள் இவ்வாறு நடந்து கொண்டதால்அங்கிருந்தவர்கள் பெரும் பதற்றம் அடைந்தனர்.
இதையடுத்து நீதிமன்றத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தான் விசாரித்துக் கொண்டிருந்த வழக்கின்விசாரணையை உடனடியாக ஒத்திவைத்த நீதிபதி பாஸ்கரன் எழுந்து தன்னுடைய அறைக்குச் சென்று விட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்களோ யாரோ சில ரவுடிகள் தான் உள்ளே புகுந்துபயங்கரமாகத் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்துசிதறி ஓடினர்.
அங்கு போலீசார் அதிக அளவில் நின்று கொண்டிருந்த போதிலும் வன்முறை நடந்த அந்தக் குறிப்பிட்டநீதிமன்றத்தினுள் உடனடியாக அவர்களால் செல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு நீதிமன்ற வளாகத்தினுள்பெரும் "தள்ளு முள்ளு" ஏற்பட்டது.
நடந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி பாஸ்கரன் உடனடியாக மாவட்ட முதன்மை நீதிபதிக்குஒரு புகார் கடிதத்தை அனுப்பி விட்டார்.
இச்சம்பவம் குறித்து மதுரை வக்கீல்கள் சங்கத்தின் தலைவரான வெள்ளைச்சாமியிடம் நிருபர்கள் கேட்ட போதுசரியான பதிலளிக்க அவர் மறுத்து விட்டார்.
இதற்கிடையே திருநெல்வேலியிலும் சிவில் நடைமுறைச் சட்டத்தை எதிர்த்து வக்கீல்கள் இன்று நீதிமன்றப்புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். அவர்களும் இன்று நீதிமன்றத்தின் கதவுகளைப் பூட்டி ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
திருச்சியில்...
இந்நிலையில் திருச்சி வக்கீல்களும் நேற்று அங்குள்ள நீதிமன்றத்தில் கடுமையான தாக்குதலை நடத்தினர்.
கோஷங்களை எழுப்பியவாறே நீதிமன்றத்திற்குச் சென்ற வக்கீல்கள் திடீரென்று நீதிமன்றத்தின் கதவுகளை இழுத்துமூடினர். சில வக்கீல்கள் ஜன்னல்களையும் மூடி அவற்றின் கண்ணாடிகளை உடைத்தனர்.
இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. நீதிமன்றத்தினுள் வழக்குகளை நடத்திக் கொண்டிருந்த நீதிபதிகள்அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த ஊழியர்களும் பொதுமக்களும் அலறி அடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தனர்.
நீதிபதிகளும் வழக்குகளை ஒத்திவைத்துவிட்டு தங்களுடைய அறைகளுக்குச் சென்று விட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களைப் போலீசார் சமாதானப் படுத்த முயன்றாலும் அதைக் கண்டு கொள்ளாமல்வக்கீல்கள் ஒவ்வொரு நீதிமன்றமாகச் சென்று அவற்றின் கதவுகளை இழுத்து மூடினர்.
இதனால் அங்கு பணிகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட நீதிபதி ஜெயபால் 8 வக்கீல்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். மேலும்இது குறித்து விசாரிப்பதற்காக சென்னையிலிருந்து ஒரு விசேஷ நீதிமன்றக் குழு திருச்சிக்கு விரைந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications