அந்தியூர் காட்டில் வீரப்பன் நடமாட்டம்? - அதிரடிப் படையினர் விரைவு
அந்தியூர்:
அந்தியூர் காட்டுப் பகுதியில் சந்தனக் கடத்தல் வீரப்பன் நடமாடிக் கொண்டிருப்பதாக சிலர் கூறியதைத் தொடர்ந்துஅப்பகுதியை அதிரடிப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஜர்க்கல் என்ற காட்டுப் பகுதியில் பச்சை நிற உடையில் வீரப்பன்திரிந்து கொண்டிருந்ததைப் பார்த்ததாக விறகு வெட்டுவதற்காகச் சென்ற சில பெண்கள் தெரிவித்தனர்.
வீரப்பனுடன் வேறு மூன்று பேர் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
இந்தத் தகவல் கிடைத்ததும் அந்தியூர் மற்றும் தண்டா காட்டுப் பகுதிகளில் வீரப்பனைத் தேடும் பணியில்அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மாதேஸ்வரன் மலையின் அடிவாரம் வரை நூற்றுக்கணக்கானஅதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே ஏழரைமத்திக்காடு பகுதியில் உள்ள ஒரு பாறையில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள சந்தனக் கட்டைகளைவீரப்பன் கடத்தியதாக எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து அதிரடிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications