காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்தார் ரணில்
சென்னை:
திருத்தணி, திருப்பதி, காஞ்சி உள்ளிட்ட கோவில்களுக்குச் செல்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேஇன்று காலை சென்னை வந்தார். மூன்று நாள் அவர் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறார்.
அதிபர் சந்திரிகாவின் அதிகாரத்தை முடக்க புதிய சட்டத்தை நேற்று அமைச்சரவை உருவாக்கியது. இதன் பின்னர்ரணில் இந்தியா வந்துள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு சிறப்பு விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவர் உடனடியாக கார்மூலம் காஞ்சிபுரம் புறப்பட்டுச் சென்றார். அங்கு சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகளை ரணில் சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது இளைய சுவாமிகள் விஜயேந்திரரும் உடன் இருந்தார். இதன் பின்னர் தமிழர் பிரச்சனை,பேச்சுவார்த்தை குறித்தும் ரணில் ஜெயேந்திரருடன் விவாதித்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ரணில் விக்கிரமசிங்கே,
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இரு சுவாமிகளும் முழு ஆதரவு அளித்தனர். அவர்களைச் சந்தித்ததுஎனக்கு மிகப்பெரிய மன தைரியத்தைக் கொடுத்துள்ளது. இலங்கையில் அமைதி ஏற்பட அவர்களது ஆசிர்வாதம்உதவும்.
இலங்கையில் நிரந்தர தீர்வுக்காக பாடுபட்டு வருகிறோம். புலிகளுடான தாய்லாந்து பேச்சுவார்த்தைக்கானதிட்டமும் இடமும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. தேதியை மட்டும் தான் இறுதி செய்ய வேண்டியுள்ளது.
எங்களுக்கு நார்வேயும் இந்தியாவும் முழு உதவிகள் அளித்து வருகின்றன. இதற்காக இரு நாடுகளுக்கும் நான்மிகுந்த கடமைப்பட்டுள்ளேன்.
இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கை மக்களை திரும்ப அழைத்துக் கொள்வோம். இந்தப் பணிகளைதுரிதப்படுத்துவோம் என்றார் ரணில்.
ஜெயந்திர சுவாமிகள் பேட்டி:
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜெயேந்திர சுவாமிகள், இலங்கை இனப் பிரச்சனை உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும்விவாதித்தோம். அங்கு தமிழர்கள், சிங்களர்களுக்கு சம வாய்ப்பு தரும் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதுகுறித்தும் இருவரும் பேசினோம். இந்தத் கல்வித் திட்டத்தில் இந்து மற்றும் புத்த மத அமைப்புகளுக்கும் பங்குஇருக்கும்.
இலங்கையில் கோவில் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இது குறித்தும் சிற்ப சாஸ்திரத்தில் இலங்கைகலைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் பேசுவதற்காக ரணிலை நானே சந்திக்க இருந்தேன். அவரேவந்துவிட்டார் என்றார் சங்கராச்சாரியார்.
இதன் பின்னர் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே திருத்தணியில் உள்ள வீரமங்களஆஞ்சநேய சுவாமி கோவிலுக்குச் சென்றார். பிறகு இரவு அவர் திருப்பதி செல்கிறார். அங்கு இரவு தங்கும் ரணில்நாளை (சனிக்கிழமை) காலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்கிறார்.
பிற்பகலில் ஹைதராபாத் செல்லும் ரணில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பேசுகிறார்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை ரணில் பெங்களூர் செல்கிறார். பெங்களூரில் நடக்கும் மகாத்மா காந்தியின் பேரன்கோபாலகிருஷ்ண காந்தியின் மகளின் திருமண விழாவில் பங்கேற்கிறார்.
கோபாலகிருஷ்ண காந்தி முன்பு இலங்கையில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.அப்போது ரணில் அவருக்கு நெருங்கிய நண்பரானார்.
திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவையும் ரணில் சந்தித்துப் பேசுகிறார்.
அன்றைய தினம் இரவே ரணில் இலங்கை திரும்புகிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications