அரசு அலுவலகத்தில் லஞ்சம் கேட்கிறார்களா?
சென்னை:
அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் உங்களிடம் லஞ்சம் கேட்கிறார்களா?
உடனே கீழ்கண்ட முகவரியில் அல்லது தொலைபேசியில் உங்கள் புகாரைத் தெரிவிக்கலாம் என தமிழக லஞ்ச-ஒழிப்புப் பிரிவின் தலைவர்திலவகவதி அறிவித்துள்ளார்.
உங்கள் புகாரை நேரிலோ அல்லது கடிம் மூலமோ அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குனர்,
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை,
சென்னை-6
தொலைபேசி எண்கள்:
044- 8295166
044- 8292081
நோட்டீஸ் போர்ட் வைக்க உத்தரவு:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்த முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் கொண்ட நோட்டீஸ் போர்ட்களைவைக்கவும் திலகவதி உத்தரவிட்டுள்ளார். இது தவிர அந்நதந்த மாவட்ட லஞ்ச- ஒழிப்புப் போலீசாரின் அலுவலக முகவரி மற்றும்தொலைபேசி எண்களையும் அதில் குறிப்பிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து திலகவதி வெளியிட்டுள்ள உத்தரவில்,
லஞ்சம் வாங்குவது சட்ட விரோதமானது. லஞ்ச- லாவண்யத்தில் ஈடுபடும் அதிகாரிகள் இனிமேல் மிகக் கடுமையாகத்தண்டிக்கப்படுவார்கள். அரசு அலுவலகம், உள்ளாட்சி அலுவலகங்கள் என மக்கள் வந்து செல்லும் அனைத்து அரசு அலுவலகங்களிலும்ஊழல் தடுப்புப் பிரிவின் விவரம் அடங்கிய நோட்டீஸ் போர்டுகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் வைக்க வேண்டும்.
இதை உடனடியாகச் செய்ய வேண்டும். நோட்டீஸ் போர்டை அலுவலகத்தில் எங்காவது ஒரு ஓரத்தில் வைத்து கடன் கழிக்காமல் பொதுமக்கள் பார்வையில் படும்வகையில் வைக்க வேண்டும்.
இவ்வாறு திலகவதி தனது உத்தரவில் கூறியுள்ளார். அவரது உத்தரவு அரசு அதிகாரிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனராக பொறுப்பேற்றது முதலே தீவிரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார் திலகவதி என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications